Website Hit Tracking

Friday, February 8, 2008




எப்பொழுது ஒரு வேலையை நீயே செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ,அந்த நிமிடமே அந்த வேலை முடிந்தது என்று அர்த்தம்.






கீதை படிப்பதை விட கால்பந்து விளையாடுவதை வரவேற்கிறேன்.

-சுவாமி விவேகானந்தர்












ஹைக்கூ பார்வை

ஜாக்கி சானின் கதை-1




கொலை வெறியோடு...
எதிலும்...
போதை,ஊக்க மருந்துகளைக் கூட உடலில் செலுத்தி,எதைச் செய்தாவது எல்லாத் துறைகளிலும் முதலிடம் எங்களுக்கே என்கிற அமெரிக்கர்களை வெறும் கை,கால்களை மட்டுமே ஆயுதமாக்கி,அதைப் பொய்யாக்கி,அந்த தவிடு பொடி,தூசுகளுக்கு மத்தியில் கம்பீரமாக எழுந்தவன்,நம் ஜாக்கி!

மருத்துவ மனையில் பிறந்தவுடனே,அவன் பிறக்க உதவிய மருத்துவருக்கே வெறும் 20 டாலருக்கு விற்க முயன்றார்,அவனது அப்பா.அவ்வளவு கொடிய வறுமை!

பிறகொரு நாளில் அந்த முயற்சி தான் வென்றது!

அப்படி வளர்ந்த ஜாக்கி சான் தான் இன்று தன் மகனைப் பற்றி உலகத்துக்கே தெரியாமல் யாரேனும் பணம் கேட்டு கடத்தி சென்று விடுவார்கள் என்று பயந்து இரகசியமாக இன்றும் கூட தன் பாதுகாவலர்களையும் அனுப்பி வைக்கிறார்,ஜாக்கி.

அந்த உழைப்புக்கும்,உயர்வுக்கும் ஜாக்கி கொடுத்த விலை,யாராலும் கொடுக்க முடியாத விலை மட்டுமில்லை.அதிர்ச்சியானதும் கூட...

இன்றும் கூட அவரின் ஒரு படம் வெளியானதும் ,அதைப் போன்றே குறைந்தது மூன்று படங்களாவது,அவரின் படச் சாயலில்,அவரை இந்த உலகத்துக்குப் பெற்றுத் தந்த சீனாவில் வெளிவருகிறது.ஜாக்கி ஒர் உந்துசக்தி!

அமெரிக்காவில் spider man,super man கார்டூன் படங்கள் புத்தகங்களாக வந்து பிற்பாடுதான் தொலைக்காட்சி தொடர்களாக திரைப்படங்களாக வந்தன.

ஆனால் ஜாக்கி படத்தில், தன் அதிரடி நடிப்பால் உயர்ந்த பிறகு தான் கார்டூன் புத்தங்களாக திரைப்படங்களாக சக்கைப் போடு போடுகிற அதிசயம் நடந்தது...!
தான் நேசிக்கிற தொழிலுக்கு தன்னுடைய உயிரையும்,உடலையும் கொடுக்க முன் வருகிற ஒரு வார்த்தை உயிரேழுத்துக்குப் பெயர் தான்...
"ஜாக்கி சான் !"
இதையே இனி நாம் ஜாக்கியின் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ளப் போகிறோம்.

கடின உழைப்பை யாராலும் தோற்கடிக்கவே முடியாது என்று சொல்லி நீண்டு கொண்டே போகிறது ஜாக்கியின் வாழ்க்கை வரலாறு...

ஜாக்கி சான்
7-4-1954 இல் பிறந்தார்.


அதிரடிப் பார்வை தொடரும்....
























எழுக தீ !






மனிதர்களை தவிர ,இயற்கை அழிவுகளை முன் கூட்டியே கண்டு பிடிக்கும் சக்தி மற்ற உயிரினங்களுக்கு இருக்கிறது என்று நிரூபித்திருக்கிறது,அறிவியல்.

அந்த மிருகங்களையே நிமிடத்திற்கு நிமிடம் பட்டாசு வெடித்து நடு நடுங்க வைக்கிறான் ,நம் தமிழன்-தீபாவளி என்று.

சங்க காலம் முதல் பார"தீ" காலம் வரை தீபாவளி பற்றிய பாடல்களே இல்லை.அந்த தீபாவளிக்கு வெடித்து கரியாகும் பட்டாசுகளைப் போலவே தீபாவளிக்கான கதையும் மூடத்தனமானது.அது தமிழ் பண்டிகையே அல்ல!

தமிழனுக்கென்று ஒரு விழா ஒன்று உண்டா என்றால்,உண்டு!தன் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் இயற்கை சக்திகளுகளான சூரியன்,ஆடு மாடுகளுக்கு தன் அறுவடைத் திருநாளில் நன்றி செலுத்துவதற்கான ஒரு விழா என்று பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டிய மிகச் சிறப்பான அர்த்தமுள்ள விழா இந்த பொங்கல்!

உலகத் தொழில்களுக்கெல்லாம் முதன்மையானது உழவுத்தொழிலே என்று கம்பீரத் தமிழன் திருவள்ளுவர் தன் சாகாத தமிழில் சொல்லி செத்துப் போனார்...
.....அந்த விவசாயிகள் தற்கொலை செய்து செத்துப் போவது தெரியாமல்....

இந்த வருடத்திலிருந்தாவது வீட்டுக்குள்ளிருந்து தெருவின் மேல் எச்சில் துப்புகின்றது போன்ற நம் அழுக்குச் சிந்தனைக்களுக்கு எதிராக தீ வைப்போம்.அந்த நெருப்பின் வெளிச்சத்தில் புதுவருடம் சுடர் விட்டு பிரகாசிக்கட்டும்!


எழுக தீ !

வையத் தலைமை கொள்!



"எந்த நாடு அடிமைப்பட்டுக்கிடன்றதோ அந்த நாடே என் தாய் நாடு"


சேகுவேரா(che guevara) சொன்ன,அவரின் கல்லறையில் செதுக்கப்பட்ட உயிர் உள்ள வாசகம்.







அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்!


எவ்வளவு கவிதைகள்
உனது விரல்களில்
கோலம்...!

அழும்
புல்லாங்குழல் சொன்னது
தன் மூங்கில் காட்டின் முகவரி..

நகரில் கூட
அருவியின் சளசளப்பு
தோழிகளுடன் நீ....

அடிக்க மனமில்லை
குறும்பு செய்யும் குழந்தைக்கு
காதலியின் பெயர்!

நீ நினைக்கிறாயோ
இல்லையோ
விக்கல் வரும் போதெல்லாம்
நான் நினைக்கிறேன்
நீ தான் நினைக்கிறாய் என்று..!



மனிதக் குரங்குகள்
பொருட்(பணக்)கிளைக்கு தாவியதில்
உறவுக்கிளை ஒடிகிறது

-கவிப்பேரரசு வைரமுத்து




திக்குக்க ளெட்டும்
பிச்சையெடுக்க பயிற்சி பள்ளி அமெரிக்க நியூயார்கில் இருக்கிறது

ரஷ்ய மொழியோடு ஆர்மீனிய மொழி கலந்து ஆர்மீனியமொழியே இல்லாமல் போய்விட்டதாம்.இங்கிலாந்தில் கெல்ட் மொழியுடன் ஆங்கிலம் கலந்ததால் கெல்ட் மொழியே இல்லாமல் போய்விட்டதாம்!

கணினி நிறுவனங்கள்....
வேலை பார்க்கும் இளம் பெண்கள் உடலை மறைக்கும் அளவுக்கு போதுமான உடை அணியாததால் உடைக்கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தி இருக்கின்றன.

பிற உலக நாடுகளைவிட பள்ளிக்கல்விக்கு அதிக செலவு செய்பவர்கள் இந்தியர்களே!

உடலிலேயே கவர்ச்சியான அங்கம் கணகள் தான்!
-ஓர் ஆய்வு.

அமெரிக்காவுக்கு படிக்க மாணவர்களை அனுப்புவதில் இந்தியா தொடர்ந்து 7-ஆவது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது.சீனா மற்றும் தென்கொரியா அடுத்த அடுத்த இடங்களில் இருக்கின்றன.








Friday, December 7, 2007

சார்லி சாப்ளின்

ஹைக்கூ பார்வை

சார்லி சாப்ளின்





யுத்த வெறி பிடித்த ஹிட்லரை கிண்டலடித்து வந்த சார்லிசாப்ளின் இயக்கி நடித்த முதல் பேசும் படம்
the great dictator

இந்த படத்தை ஹிடலர் இருட்டில் தனியாளாக அமர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல்
திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப
பார்த்துக்கொண்டே இருந்தானாம்!


'சார்லி-ஹெட்டி'யின் காதல் கூட உருக்கமானது,உயவர்வானது...!

தன் ரத்தம் சதைகளால் பிள்ளைகளுக்கு உருவம் கொடுப்பதால்தானோ என்னவோ அம்மாவிற்கு,தன் கணவனை விட,பிள்ளைகளின் உள்ள பாசம் வலுவானதாக இருக்கிறது.

ஒரு பொறுப்பில்லாத குடிகார அப்பாவுக்கு இரண்டாவது மகனாக சார்லி சாப்ளின் 1889 ஆம் ஆண்டு பிறந்தார்.முழுப்பெயர் 'சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின்'.

லண்டன் மதுவிடுதிகளில் பாடும் பெண் ஹென்னா தான் சார்லியின் அம்மா.இசைநிகழ்ச்சிகளில் வரும் பணமே வருமானம்.இன்னொரு அப்பாவுக்கு பிறந்தவன் அண்ணன் ஸிட்னி.

ஒரு நாள் மேடையில் பாடும்போது தொண்டையில் பிரச்னை;பாட முடியவில்லை!ஒரே கூச்சல்!அவமானம் கண்ணீராக கரைய மேடையை விட்டு கீழே இறங்கினாள்,ஹென்னா.

ஆறு வயது சிறுவன் சார்லி என்ன நினைத்தானோ மேடையேறினான்.அது ஒரு மாக கலைஞனின் முதல் கலைப் பயணம் என்று யாருக்கும் தெரிந்திருக்காது!

தன் அம்மா சொல்லிக்கொடுத்த பாடலை பாடி,தன் பிஞ்சு கால்,கைகளை அசைத்து நடனமாடத் துவங்கினான்.விசில்,கைத்தட்டல் அரங்கமே அதிர்ந்தது!சில்லறைகள் சீறிப் பறந்தன.

சில்லறைகளை பொறுக்கினான்,சார்லி.பாடச் சொல்லி கூச்சலிட்டது கூட்டம்!
'சில்லறைகளை பொறுக்கிய பிறகுதான் பாடுவேன்;என்னால் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை என்னால் செய்ய முடியாது!' மீண்டும் கொல்லென்று எழுந்த சிரிப்பால் வானம் அதிர்ந்தது!

தன் தாய் பாடமுடியாமல் தவித்ததை நடித்துக் காட்ட மீண்டும் காது கிழியும் சிரிப்பொலி...

மேடைப்பாடல்,துணி தைத்து கொடுப்பது என்று வந்த வருமானம் போதுமானதாக இல்லை!பசிக்கு முன்னால் மூவரும் தோற்றுப்போனார்கள்.வேறு வழியில்லாமல் ஹென்னா சார்லியின் அப்பா மேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தாள்,தீர்ப்பு இழுத்தது.

தன் பிள்ளைகள் இங்காவது வசதியாக படிக்கட்டும் என்று மூவரும் அநாதை விடுதி ஒன்றுக்குப் போய் சேர்ந்தார்கள்.தனித் தனியாக பிரிக்கப்பட்டார்கள்.காலக்கொடுமை!அதனால்தானோ என்னவோ ஹென்னாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.

சார்லி,ஸிட்னியையும் சார்லியின் அப்பா தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.அப்பா தன் இன்னொரு மனைவி லூஸி வீட்டுக்கு கூட்டிப்போனார்.அங்கேயும் பசி சார்லி,சிட்னியையும் வீதிக்கு துரத்தி சிரித்தது.'அம்மா,அம்மா'என்று கதறி அழுதான் சார்லி.அங்கே அவனுக்கு அழுகையைத் தவிர ஆறுதல் சொல்ல யாரும் இல்லை!

ஒரு நாள் வீட்டு வாசலில் அந்த அதிசயம் நடந்தது!அம்மா ஹென்னா வந்திருந்தாள்!!சார்லி,சிட்னியையும் ஓடிப்போய் ஒட்டிக்கொண்டார்கள்!மீண்டும் மூன்று உயிர்களும் ஓர் உயிரானது
அந்த நமக்கும் மீறிய சக்திக்குப் பெயர் தான் அன்பு!

சாப்ளின் அப்பாவிடம் இருந்து கொஞ்சம் பணம் வந்தது.பள்ளிப் படிப்பு தடையில்லாமல் தொடர்ந்தது.பள்ளிகளில் நடக்கும் நாடகம்,நடனங்களில் தனக்கென்று ஒரு நல்ல பெயரை சம்பாதிக்க தவறவில்லை!

அவன் சார்ந்த நடன,நாடக்குழு அமெரிக்காவிற்கு போகும் சந்தர்ப்பம் வந்தது.அங்கு போன சாப்ளின் அமெரிக்க சுதந்திரதேவி சிலை நோக்கி தன்னை மறந்து கத்தினான் 'ஏய்! அமெரிக்காவே பத்திரமாக இரு! இன்னும் கொஞ்ச நாளில் உன்னை முழுவதுமாக கொள்ளையடிக்க இங்கே ஒருவன் வருவான் வந்து கொண்டிருக்கிறான்!' என்று.

அடுத்த அய்ந்தாண்டுகளில் அதுதான் நடந்தது.உலகத்தையே கொள்ளையடித்தான்,சாப்ளின்.


ன் முதல் காதலி ஹெட்டியை சார்லியின் ஏழ்மையைக் காட்டி பிரித்தான்,அவளின் அண்ணன்.அந்த தோல்வியை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.அவரை வாழ்நாள் முழுக்க சித்திரவதை செய்த்து!பிற்பாடு அவர் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்ட எண்ணற்ற திருப்தியற்ற திருமணவாழ்க்கைகளுக்கும் அதுவே காரணமாக அமைந்தது.தன்னை துன்புறுத்தும் ஹெட்டியின் நினைவுகளில் இருந்து தப்பிக்க,பொய்யாக தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு...தீவிர வாசிப்பை மேற்கொண்டார்.தனக்கான சிந்தனைகளை செதுக்கிக் கொண்ட கால கட்டம் அது!

முதல் படம்
news paper reporter

ஒரு நாள் ஏதாவது நடித்துக்காட்டு என்று நடிக்க வாய்ப்புக் கேட்ட சார்லியை பார்த்துச் சொன்னார் சென்னட் என்னும் தயாரிப்பாளர்.அவர் சைசுக்கு உடைகள் இல்லை எனபதால்,பெரிய சைஸ் தொள தொள பேண்ட்,பொருத்தமே இல்லா சிறிய மேல் சட்டை,ஷு,தொப்பி,கைத்தடி.இப்படித்தான் உருவானது சார்லி சாப்ளினின் உருவ முத்திரை!இந்த உருவ முத்திரை பதித்த பொருட்கள் இன்றும் கூட விற்று தீர்ந்து கொண்டிருக்கும் அதிசயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது!

அப்படியே மேடையேறி நடித்துக் காட்ட சிரிப்பால் மேடை அதிர்ந்து அடங்கியது!

என்னிடம் கதை ஒன்று இருக்கிறது,நானே நடித்து நானே இயக்க விரும்புகிறேன் என்றார், சென்னடிடம்,சார்லி.

முதலில் ஒத்துக்கொள்ளாத சென்னட்,மக்களிடம் அவருக்கிருந்த செல்வாக்கை மனதில் கொண்டு ஒரு நிபந்தனை விதித்தார்."அந்த படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பு செலவு அனைத்தயும் வட்டியும் முதலுமாக நீங்கள் திருப்பித் தரவேண்டும் சம்மதமா?" என்று கேட்டார்.

அதற்கு சாப்ளின் சொன்னார் "முழுப்பணத்தையும் திருப்பித் தருவேன்.அந்தப் படம் தோல்வியடைந்தால்,நான் இந்த சினிமாவை விட்டே வெளியேறி விடுகிறேன்"என்று

அப்படி இயக்கி வெளிவந்த முதல் வெற்றிப்படம்

caught in the rain

ஒரு முறை சாப்ளின் படப்பிடிப்பு முடிந்து நியூயார்க் நோக்கிப் போன தகவல் எப்படியோ தெரிய வர...

மலர்கொத்துக்கள்,பேண்டு வாத்தியங்கள்,உயரமான கம்பம்,மரங்களில் எல்லாம் மக்கள் வெள்ளம்!

பசியும்,அவமானங்களும் இதற்கு தானா?நம் வாழ்க்கை மனிதகுலம் பயனுறும் காவியமாக வேண்டாமா?யோசிக்க ஆரம்பித்தார்.
அமெரிக்காவிற்கு குடியேற வரும் மனிதர்களிடம் அரசு நடத்தும் கெடுபிடிகளை கடுமையாகச் சாடி
the immigrant
படம் வெளியானது அமெரிக்க பிணந்தின்னும் கண் சார்லியை கண்காணிக்க உத்தரவு போட்டது,இப்படித்தான்!

சார்லி ஏழைகளைப்பற்றியே படம் எடுத்ததால்,பணக்காரர்கள்,எதிரிகளானர்கள்.வேறு வழியில்லாமல் தானே ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டியதாயிற்று!

இக்கால கட்டத்தில்தான் தன் காதலி ஹெட்டியைப் போலவே இருக்கிறாள் என்று மில்ட்ரெட் ஹாரிஸ் எனபவளை திருமணம் செய்து கொண்டார்.ஆண் குழந்தை பிறந்து இறந்தது,அவன் நினைவாக தயாரன படந்தான்
the kid
லிட்டா கிரே,பவுலட் கோடர்ட்,ஊநா ஓ நீல் போன்றவர்கள் மேல் காதல் வயப்பட்டதும் காயப்பட்டதும் துன்பியல் வரலாறு!

அவர்கள் அனைவரும் தோற்றத்தில் ஹெட்டியைப் போலவே இருந்தார்கள் என்பது இன்னொரு அதிசய தகவல்!

புகழின் உச்சியில் இருந்த நேரம்..

"என்னை நினைவிருக்கிறதா? நான் தான் ஹெட்டி!நான் ஒரு முட்டாள்,அபாக்கியசாலி.நீங்கள் எவ்வளவு உயரமானவர் எனபதை உங்கள் படத்தைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.நீங்கள் லண்டன் வருவதாக இருந்தால் எனக்கு தெரிவியுங்கள் கடைசியாக உங்களின் கைகளை பிடித்து கதறி அழு வேண்டும்.என் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்! "
என்ற கடிதம் படித்து தன் பார்த்த எல்லா வேலைகளையும் ரத்து செய்தை விட்டு லண்டனுக்கு பயணமானர்,சாப்ளின்.

பஞ்சையாய்,பராரியாய்,பிச்சைக்காரனாய் துரத்தியடித்த அதே லண்டன் தெருக்கள் வெடகமே இல்லாமல் விழாக்கோலம் பூண்டது.சார்லியை வரவேற்க;வெறி பிடித்த மக்கள் வெள்ளம்!


இந்த தடவையும் ஹெட்டி ஏமாற்றித் தான் போயிருந்தாள்!அவளின் மரணச்செய்தியைத் தான் கேடக முடிந்தது!அவளின் நினைவாக கொஞ்ச கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்த சார்லி.இந்த இடி செய்தி கேட்டு இன்னும் ஒரு முறை செத்துப் போனார்!

கடவுளைப் போலவே காதலும் சரியாக புரிய படாமலேயே இந்த பூமியை ஆண்டு கொண்டுதான் இருக்கிறது!

"ஓ வென கதறி அழக்கூ முடியவில்லை அவ்வளவு மக்கள் வெள்ளம்!"

நடு இரவில் ,முகத்தை மப்ளர் கொண்டு மூடி பசியால் கதறி அழுது சுற்றி அலைந்து திரிந்த வீதிகளுக்கு மீண்டும் ஒருமுறைப் போய் மவுனமாக அழுது விட்டு வந்தான்,அந்த மாக கலைஞன்!

கூடவே தன் தாயின் மரணமும் சுனாமியாக வந்து தாக்கியது,"இந்த தோற்கும் அன்பு அவளுடையது! அவளது தியாகம்,திறமைகள்,அவள் பட்ட வேதனைகளுக்கு முன்னால்,நானும் என் படங்களும் அவளின் கால் தூசுக்குச் சமம்! " என்று சாப்ளின் நெஞ்சு வெடிக்க கதறி அழதார்!

சினிமா பேச தொடங்கிய போதும் கூட பேசாத படங்களையே எடுத்தார்!தான் எடுக்கும் பேசாத பற்றி மக்களைப் பேச வைக்கும் என்ற தன்னம்பிக்கையோடு அந்த படந்தான்
city lights
எதிரிகள் சதி செய்ததால் ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் திரையிடப்பட்டு கட்டுக்கடங்கா கூட்டத்தைக் கூட்டி எதிரிகளை பணிய வைத்த படம்!

இந்தியாவிலிருந்து வரும் காந்தியைப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்தார்!

உலகம் இயந்திரமாகி வருவதையும்,மனித பண்புகள் நசுக்கப்படுவது பற்றியும் சாடி வந்த
modern times
வெளி வந்த பிறகு மனித குலத்தை மேம்படுத்த வந்தவனை சரியாகத் தான் அடையாளப்படுத்தியது அல்ப புத்தி அமெரிக்க அரசு "கம்யூனிஸ்ட்!"என்று.

அமெரிக்க அரசு லண்டனுக்கு புறப்பட்ட சார்லியிடம் தெரிவித்து,"உங்கள் சொத்து பறிமுதல் செய்யப் படுகிறது.அமெரிக்காவில் காலடி வைத்தால் கைது செய்ய படுவீர்கள்!"

ஸ்விட்சர்லாந்து குடிபெயர்ந்து அங்கும் இரண்டு படங்களை இயக்கினார்.

1972 ஆம் வருடம் கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவப்படுத்தியது!

1977 இல் ஒரு கிறிஸ்துமஸ் நாளில்....


எல்லோரையும்
கண்ணீர் வர
சிரிக்க வைத்த
அந்த மாக கலைஞனின்
மரணம்
அழவைத்தது!


_ஆதிசிவம்









Friday, November 23, 2007








விவேகானந்தர் ஒருமுறை ,வெளிநாட்டுக்குச் சுற்றுப் பயணம் சென்றிருந்த போது,அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவர் "உங்கள் நாட்டுக்கும்,எங்கள் நாட்டுக்கும் நீங்கள் கண்ட வித்தியாசம் என்ன?"என்று கேட்டார்.

"உங்கள் நாட்டில் தாயைத்தவிர மற்ற பெண்களை தாரமாக நினைக்கிறார்கள்;எங்கள் நாட்டிலோ தாரத்தைத் தவிர மற்ற பெண்களை தாயாக நினைத்து வணங்குகிறார்கள்"என்றார்
- தன்னம்பிக்கை சாமியார் விவேகானந்தர்.










திருபாய் அம்பானி


நீங்கள் எடுத்துக்கொள்கிற துறை எதுவானாலும் பரவாயில்லை .அதில் இதுவரை பணியாற்றியவர்கள் எல்லோரும் சேர்ந்து,என்னவெல்லாம் சாதித்தார்களோ,அவற்றுக்கெல்லாம் மேலாக,இன்னும் பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும்.இந்த ஒரே நோக்கத்துடன் பாடுபடுங்கள்.பெரிதாக கனவு காணுங்கள்,அதை நிறைவேற்றுங்கள்,என்றார் அம்பானி.

17 வயதில் அம்பானி ஏடன்(ஓர் அரபு தேசம்)நாட்டிற்கு வேலைக்குப் போனார்.அந்த தேசத்தின் நாணயம் 'ரியால்'முழுவதும் வெள்ளியால் ஆனது என்பதை அறிந்து ,அந்த நாணயங்களை உருக்கி விற்றால் ,உருக்கிய வெள்ளியின் விலை ரியாலின் விலையைவிட அதிகம் என்பதை அறிந்து பக்கத்து நாடான இங்கிலாந்துக்கு திருட்டுத்தனமாக விற்று காசு சேர்த்தார்.அந்த திருட்டை ஏடான் நாடு 3 மாதங்களுக்குள் கண்டுபிடித்துவிட்டது.

இந்தியாவிற்கு திரும்பிய அம்பானி ஏற்றுமதி தோழிலில் ஈடுபடலாம் என்று முடிவெடுத்தார்.பாலைவன அரேபிய நாடுகளில் ரோஜாவளர்க்க மண் தேவைப்படுகிறது என்பதை
அறிந்து,இந்திய மண்ணைக்கூட ஏற்றுமதி செய்து காசாக்கினார்.

அம்பானி மிகவும் 'எளிமையான'மனிதர்.ஆரம்பத்தில் டேல்லிக்கு தோழில் சம்பந்தமாக வரும்போதெல்லாம் டேல்லியில் உள்ள பிரபலமான ஹோட்டல் பணியாளர் ஒருவரோடு ரகசிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ளவார்.

எல்லோரிடமும் அசோக விடுதி அறையில் தங்கியிருப்பதாக கூசாமல் பொய் சொல்வார்.அவருக்கு வரும் தொலைபேசிக்குறிப்புகளை குறித்துக்கொண்டு 'அவர் வெளியே போயிருக்கார் சார்'என்று அந்த பணியாளரைச் சொல்ல சொலவார்.மாலை நேரம் வந்து குறிப்புகளைப் பெற்றுக்கொள்ளும் அம்பானி அந்த 'சேவை' செய்யும் ஆளுக்கு ஒரு நாள் சம்பளம் 25 ரூபாய் தருவார்.

தன்னைப்பற்றி குறை சொல்கிறவர்களை பற்றி அம்பானி இப்படிச் சொலவார் 'என்னுடைய தோல் ரொம்பவே கனமானது.இது போன்ற விமர்சனங்களும்,அபாண்டமான குற்றச்சாட்களும் எனக்கு பழகிவிட்டன.முகம் தெரியாதவர்களோடு போராடி,தன்னுடைய பொன்னான நேரத்தை வீண்டிப்பதைக்காட்டிலும் ரிலைன்ஸின் வளர்ச்சியில் என் கவனத்தை திருப்புவேன்'

2002 ஆம் ஆண்டு ஜீலை 6-ஆம் நாள் அவர் மரணமடைந்த துயரச்செய்தி கிடைத்தபோதும் கூட ரிலைன்ஸின் அலுவலகங்களும்,ஆலைகளும் வழக்கம் போல் செயல்பட்டுக்கொண்டியிருந்தன.அம்பானியின் இருமகன்களும் ஜூலை 8-ஆம் தேதியே தங்கள் அலுவலகங்களுக்கு திரும்பிவிட்டார்கள்.

இரு மகன்களும் தம் அப்பா திருபாய் அம்பானியின் நினைவாக மலிவு விலையில் தருகிறேன் என்று சொல்லி,வெளிநாட்டு அழைப்புகளை,உள்ளூர் அழைப்புகளாக மாற்றி,இந்திய அரசை ஏமாற்றி அதற்கு தண்டம் கூடக் கட்டி,சொத்து ஆசையால் இருவரும் சண்டை போட்டு பிரிந்து,பொதுமக்கள் வாங்கிய,பங்கு சந்தையில்(share market)வந்த பணத்தை எல்லாம் தன் பெயரில் காட்டி இந்தியாவின் பெரும் பணக்காரரர்கள் ஆனார்கள் என்பவையெல்லாம்
உங்களுக்கும் தெரிந்ததே!











அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்!








நெருப்பு மட்டுமல்ல
சிரிப்பும் காயப்படுத்தும்
காதல்

மரத்தைப் பற்றிய
கவிதையை விட
மரம் அழகானது


பொதுநலம் பேசும்
சுயநலவாதி
அரசியல்வாதி

சவப்பெட்டி
மலர்வளையங்கள்
அருகில் நாளைய பிணங்கள்!

உயிருடன் பிணங்கள்
விழுந்து கிடக்கிறது
சாராயக்கடையில்

வயிறு காலியானது
மனசு பாரமானது
பிறந்து பெண் குழந்தை!

உன்னால் மட்டும்
எப்ப்டி முடிகிறது
பிரியும்போது கூட
புன்னைக்க....?










திக்குக்க ளெட்டும்


பெண்களுக்கு எதிரான கொடுமை,இந்தியாவுக்கு இரண்டாமிடம்!
முதலிடம்?ஆப்பிரிக்க நாடான ஜாம்பியா

பில்கேட்ஸின் அறக்கட்டளை,பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் தயாரிப்புகள் எந்த நாடுகளில் எல்லாம் அதிகம் விற்பனை ஆகிறதோஅல்லது நல்ல மார்கெட் இருக்கிறதோ அங்கெல்லாம் மட்டுந்தான் கவனம் செலுத்துமாம்.அந்தந்த நாடுகளின் பெருந்தலைகளை தன் வசப்படுத்தி,அந்த பழக்கத்தை தன் பிஸினஸ் விஸ்தரிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளவதே,அந்த திட்டம்!

பொதுக்கழிப்பிடங்களில் கூட 'ஆண்-பெண்'என்று படங்களை வரைந்து வைத்திருக்கும் எழுத படிக்க தெரியாதவர்கள் நிறைந்திருக்கும் நம் நாட்டில் ,நீதி மன்றங்கள்,அந்த மக்களின் தாய்மொழியை புறக்கணிக்கலாமா?
-நீதிபதி சந்துரு

தனியார் பல்கலைக்கழகங்கள் நடிகர், நடிகைகளுக்கு டாக்டர் பட்டம் வழங்கி, பல்கலைக்கழகங்களின் மதிப்பை ,கவுரவத்தை குறைத்து விட்டார்கள்!
-தமிழக உயர்கல்வி மன்ற துணைத்தலைவர் ராமசாமி

எல்லா மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால்,பேசுகின்ற மொழியான தாய்மொழியில் இலக்கண,இலக்கியங்களோடு பேசுவதுதான் தமிழனுக்கு அழகு!
-குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

















Wednesday, November 7, 2007


திரை விமர்சனம்



அட! இப்படி சினிமாத் தனமில்லா சினிமா பார்த்து எத்தனை நாளாச்சு!

இணையதளங்கள்,பத்திரிக்கை,டீவி ஊடகங்களில் எல்லாம் விவாதங்களை ,இத்தனை அதிர்வுகளை ஏற்படுத்தி இருப்பது ஒரு தமிழ் மூளை,இயக்குநர் ராம் தமிழ் எம் ஏ.

காரில் செல்லும் கால்சென்டர் இளைஞனை வெளியில் இழுத்துப்போட்டு தமிழ் செய்யுள் ஒன்றைச் சொல்லி அதற்கு அர்த்தம் சொல்லச் சொல்லும் தமிழ் தாண்டவம்...

"உனக்கு தைரியம் இருந்த இங்கே தொடு" என்று மேல் சட்டையில் ஆங்கிலத்தில் எழுதி அணிந்து வரும் ஐ.டி பெண்ணிடம் இதையே தமிழில் எழுதி தைரியமா நீ வெளியில நடமாட முடியுமா? என்று கேட்டு அந்த பெண்ணின் மார்பைத்தொடும் ஆத்திரம்...

25 வருஷத்துக்கு அப்புறம் வந்த கம்யூட்டர் படிச்ச 2 லடசம் சம்பளம் 3000 வருஷத்திற்கு அப்புறமா வந்த தமிழ் படிச்சவனுக்கு 2 ஆயிரம் சம்பளம்...

சிறையில் இருப்பனிடம் காவலர் "வெளியில சிகரெட் பிடிச்சாத்தான் தப்பு ஆனா அத இங்க பிடிச்ச தப்பில்ல" என்று சிகரெட் தரும் போலீஸ்...

தொடர் வண்டிப் பயணத்தின்போது தூங்குகின்ற பயணியிடம் பணம் திருடும் பயணச்சீட்டு பரிசோதகரை ஓடும் ரயிலிருந்து தள்ளி விட்டு கொல்லும் பச்சைப் படுகொலைகள் நிறைய....

படம் முழுக்க தொடர்கிறது...!

ஏழு வயதில் காதலி சொல்லும் "நெசமாத்தான் சொல்றியா?" ஹைக்கு வாசகம் மரணம் வரை தொடர்கிறது!....

ஏழு வயதில் தொடர்வண்டி குகைப்பாதை இருட்டுக்குள் ஒடிப்போய் செத்துப்போகிறது செல்ல நாய்.அவன் பார்க்கும் முதல் மரணம்!

வரிசையாக மரணம் துரத்தி அம்மா,அப்பா,அனாதையாக நின்றவனை தூக்கி வளர்த்த தமிழ் வாத்தியார்,தன் காதலியின் அப்பா மரணம்...என்று நீள்கிறது.

தனக்கு மருத்துவப் படிப்பு படிக்கும் தகுதியிருந்தும் தன் தமிழ் வத்தியாரின் நினைவாக தமிழ் படிப்பவனை...

தன்னிடம் சொல்லாமல் கூட போனக் காதலியைத்தேடி தாடி முடியோடு அலைந்து தேடிக் கண்டுபிடிப்பவனை...
மனித உறவுகளுக்கு அன்புக்கு மரியாதை கொடுப்பவனை...

பணத்தை வைத்து மனித உறவுகளை தேர்ந்தேடுக்கிற, வணிக நிறுவனங்களாக மாறி விட்ட "பணக்கார இந்தியா"வின் குடும்ப உறவுகளுக்கு மத்தியில்....

இப்படிப்பட்ட ஒருத்தனை ஊடகங்கள் மனநோயாளி என்று விமர்சனம் செய்வது எனக்கொன்றும் ஆச்சரியமாகத் தெரியவில்லை!

வாழ்க்கையும்,காதலையையும் என்னவென்று புரிந்து கொண்டு வாழத் தொடங்கும்போது...அவர்களை தேடி போலீஸ் படை வருகிறது.நீயாவது தப்பி பிழைத்துப்போ என்கிறான் காதலி மறுக்கிறாள்.இருவரும் செத்துப்போகிறார்கள்.

படம் முடிகிறது!

படம் முழுக்க அதீத சோகம் என்று விமர்சனம் செய்கின்றன,ஊடகங்கள்.

இந்த சினிமாவில் சொல்லப்பட்டதை விட அதிகமான துயரங்களோடுதான் மக்கள் வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற உணமை என்னைச் சுட...

எனக்கு தூக்கம் போனது....!









அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்!






எந்த ஊருக்கு போனாலும்
அம்மாவை நினைவுப்படுத்தி
விடுகிறது...
பசி!.

அன்பே
உன் இடையினம்
ஒரு மெல்லினம்
இதயம் மட்டும்
ஏனோ வல்லினம்
மெய்யேழுத்தெ
பொய் எழுதிப்போகாதே

அன்பே
நான் உனக்கு எழுதிய
காதல் கடிதத்ததை
கள்ளத்தனமாய்
படித்த தமிழாசிரியரான
உன் அப்பா
"சந்திப் பிழை"
என்றால் சரியென்றிருப்பேன்
ஆனால்,நம்
சந்திப்பே அல்லவா பிழை என்கிறார்!

சப்பானில் மருத்துவ படிப்பு வரை எல்லா படிப்புகளும் தாய் மொழியான சப்பானிய மொழியில் மட்டுமே கற்றுத்தரப்படுகிறது.

நம் ரத்த ஜீன்கள் கூட தாய்மொழி வழி கல்வியைதான் எளிதாக ஏற்றுக்கொள்ளுமாம்.

உங்கள் மடிக்கனிணி(laptop)தொலைந்து விட்டதா?உங்கள் கனிணி இணையத்தளத்தில் இணையும்போது உங்களால் உங்கள் மடிக்கனிணியில் உள்ள தகவல்களை மீடக முடியும்.gps வழியே தகவல்களை அழிக்கவும் முடியும்.(www.mylaptopgps.com)









திக்குக்க ளெட்டும்


கராத்தே,குங்குபூ போன்ற தற்காப்புகலைகள் தென்தமிழ் நாட்டிலிருந்துதான் கீழ்திசை நாடுகளுக்கு சென்றுள்ளன.

கணவரால் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் 40 சதவீதம்..

பசிக்கொடுமையை ஒழிப்பதில் பொதுவுடைமை நாடான "கியூபா"முன்னணியில் இருக்கிறது.

அரசியல் என்பது தன்னைத்தானே தியாகப்படுத்திக் கொள்வது.ஒரு நாட்டையோ,மாநிலத்தையோ நிர்வகிப்பதற்கு சுயநலமற்ற தன்மை வேண்டும்.நானோ முழுக்க முழுக்க வர்த்தக ரீதியிலானவன்
-நடிகர் ஷாருக்கான்

"பெரியார்"திரைப்படம் ஒரு விருந்து மாதிரி.அந்த விருந்தில் ,நான் கடவுள் எதிர்ப்பு கொளகையை எடுக்காமல்,மற்ற நல்ல கொள்கைகளை எடுத்துக்கொண்டேன்
-நடிகர் ரஜினிகாந்த்

படுக்கையில் இருந்து சிகரெட் பிடித்துக்கொண்டே அசந்து தூங்கியவர் சிகரெட் தீயால் சாம்பலானர்.

Blog Archive