Website Hit Tracking

Friday, November 23, 2007








விவேகானந்தர் ஒருமுறை ,வெளிநாட்டுக்குச் சுற்றுப் பயணம் சென்றிருந்த போது,அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவர் "உங்கள் நாட்டுக்கும்,எங்கள் நாட்டுக்கும் நீங்கள் கண்ட வித்தியாசம் என்ன?"என்று கேட்டார்.

"உங்கள் நாட்டில் தாயைத்தவிர மற்ற பெண்களை தாரமாக நினைக்கிறார்கள்;எங்கள் நாட்டிலோ தாரத்தைத் தவிர மற்ற பெண்களை தாயாக நினைத்து வணங்குகிறார்கள்"என்றார்
- தன்னம்பிக்கை சாமியார் விவேகானந்தர்.










திருபாய் அம்பானி


நீங்கள் எடுத்துக்கொள்கிற துறை எதுவானாலும் பரவாயில்லை .அதில் இதுவரை பணியாற்றியவர்கள் எல்லோரும் சேர்ந்து,என்னவெல்லாம் சாதித்தார்களோ,அவற்றுக்கெல்லாம் மேலாக,இன்னும் பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும்.இந்த ஒரே நோக்கத்துடன் பாடுபடுங்கள்.பெரிதாக கனவு காணுங்கள்,அதை நிறைவேற்றுங்கள்,என்றார் அம்பானி.

17 வயதில் அம்பானி ஏடன்(ஓர் அரபு தேசம்)நாட்டிற்கு வேலைக்குப் போனார்.அந்த தேசத்தின் நாணயம் 'ரியால்'முழுவதும் வெள்ளியால் ஆனது என்பதை அறிந்து ,அந்த நாணயங்களை உருக்கி விற்றால் ,உருக்கிய வெள்ளியின் விலை ரியாலின் விலையைவிட அதிகம் என்பதை அறிந்து பக்கத்து நாடான இங்கிலாந்துக்கு திருட்டுத்தனமாக விற்று காசு சேர்த்தார்.அந்த திருட்டை ஏடான் நாடு 3 மாதங்களுக்குள் கண்டுபிடித்துவிட்டது.

இந்தியாவிற்கு திரும்பிய அம்பானி ஏற்றுமதி தோழிலில் ஈடுபடலாம் என்று முடிவெடுத்தார்.பாலைவன அரேபிய நாடுகளில் ரோஜாவளர்க்க மண் தேவைப்படுகிறது என்பதை
அறிந்து,இந்திய மண்ணைக்கூட ஏற்றுமதி செய்து காசாக்கினார்.

அம்பானி மிகவும் 'எளிமையான'மனிதர்.ஆரம்பத்தில் டேல்லிக்கு தோழில் சம்பந்தமாக வரும்போதெல்லாம் டேல்லியில் உள்ள பிரபலமான ஹோட்டல் பணியாளர் ஒருவரோடு ரகசிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ளவார்.

எல்லோரிடமும் அசோக விடுதி அறையில் தங்கியிருப்பதாக கூசாமல் பொய் சொல்வார்.அவருக்கு வரும் தொலைபேசிக்குறிப்புகளை குறித்துக்கொண்டு 'அவர் வெளியே போயிருக்கார் சார்'என்று அந்த பணியாளரைச் சொல்ல சொலவார்.மாலை நேரம் வந்து குறிப்புகளைப் பெற்றுக்கொள்ளும் அம்பானி அந்த 'சேவை' செய்யும் ஆளுக்கு ஒரு நாள் சம்பளம் 25 ரூபாய் தருவார்.

தன்னைப்பற்றி குறை சொல்கிறவர்களை பற்றி அம்பானி இப்படிச் சொலவார் 'என்னுடைய தோல் ரொம்பவே கனமானது.இது போன்ற விமர்சனங்களும்,அபாண்டமான குற்றச்சாட்களும் எனக்கு பழகிவிட்டன.முகம் தெரியாதவர்களோடு போராடி,தன்னுடைய பொன்னான நேரத்தை வீண்டிப்பதைக்காட்டிலும் ரிலைன்ஸின் வளர்ச்சியில் என் கவனத்தை திருப்புவேன்'

2002 ஆம் ஆண்டு ஜீலை 6-ஆம் நாள் அவர் மரணமடைந்த துயரச்செய்தி கிடைத்தபோதும் கூட ரிலைன்ஸின் அலுவலகங்களும்,ஆலைகளும் வழக்கம் போல் செயல்பட்டுக்கொண்டியிருந்தன.அம்பானியின் இருமகன்களும் ஜூலை 8-ஆம் தேதியே தங்கள் அலுவலகங்களுக்கு திரும்பிவிட்டார்கள்.

இரு மகன்களும் தம் அப்பா திருபாய் அம்பானியின் நினைவாக மலிவு விலையில் தருகிறேன் என்று சொல்லி,வெளிநாட்டு அழைப்புகளை,உள்ளூர் அழைப்புகளாக மாற்றி,இந்திய அரசை ஏமாற்றி அதற்கு தண்டம் கூடக் கட்டி,சொத்து ஆசையால் இருவரும் சண்டை போட்டு பிரிந்து,பொதுமக்கள் வாங்கிய,பங்கு சந்தையில்(share market)வந்த பணத்தை எல்லாம் தன் பெயரில் காட்டி இந்தியாவின் பெரும் பணக்காரரர்கள் ஆனார்கள் என்பவையெல்லாம்
உங்களுக்கும் தெரிந்ததே!











அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்!








நெருப்பு மட்டுமல்ல
சிரிப்பும் காயப்படுத்தும்
காதல்

மரத்தைப் பற்றிய
கவிதையை விட
மரம் அழகானது


பொதுநலம் பேசும்
சுயநலவாதி
அரசியல்வாதி

சவப்பெட்டி
மலர்வளையங்கள்
அருகில் நாளைய பிணங்கள்!

உயிருடன் பிணங்கள்
விழுந்து கிடக்கிறது
சாராயக்கடையில்

வயிறு காலியானது
மனசு பாரமானது
பிறந்து பெண் குழந்தை!

உன்னால் மட்டும்
எப்ப்டி முடிகிறது
பிரியும்போது கூட
புன்னைக்க....?










திக்குக்க ளெட்டும்


பெண்களுக்கு எதிரான கொடுமை,இந்தியாவுக்கு இரண்டாமிடம்!
முதலிடம்?ஆப்பிரிக்க நாடான ஜாம்பியா

பில்கேட்ஸின் அறக்கட்டளை,பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் தயாரிப்புகள் எந்த நாடுகளில் எல்லாம் அதிகம் விற்பனை ஆகிறதோஅல்லது நல்ல மார்கெட் இருக்கிறதோ அங்கெல்லாம் மட்டுந்தான் கவனம் செலுத்துமாம்.அந்தந்த நாடுகளின் பெருந்தலைகளை தன் வசப்படுத்தி,அந்த பழக்கத்தை தன் பிஸினஸ் விஸ்தரிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளவதே,அந்த திட்டம்!

பொதுக்கழிப்பிடங்களில் கூட 'ஆண்-பெண்'என்று படங்களை வரைந்து வைத்திருக்கும் எழுத படிக்க தெரியாதவர்கள் நிறைந்திருக்கும் நம் நாட்டில் ,நீதி மன்றங்கள்,அந்த மக்களின் தாய்மொழியை புறக்கணிக்கலாமா?
-நீதிபதி சந்துரு

தனியார் பல்கலைக்கழகங்கள் நடிகர், நடிகைகளுக்கு டாக்டர் பட்டம் வழங்கி, பல்கலைக்கழகங்களின் மதிப்பை ,கவுரவத்தை குறைத்து விட்டார்கள்!
-தமிழக உயர்கல்வி மன்ற துணைத்தலைவர் ராமசாமி

எல்லா மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால்,பேசுகின்ற மொழியான தாய்மொழியில் இலக்கண,இலக்கியங்களோடு பேசுவதுதான் தமிழனுக்கு அழகு!
-குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

















No comments:

Blog Archive