Website Hit Tracking

Wednesday, November 7, 2007


திரை விமர்சனம்



அட! இப்படி சினிமாத் தனமில்லா சினிமா பார்த்து எத்தனை நாளாச்சு!

இணையதளங்கள்,பத்திரிக்கை,டீவி ஊடகங்களில் எல்லாம் விவாதங்களை ,இத்தனை அதிர்வுகளை ஏற்படுத்தி இருப்பது ஒரு தமிழ் மூளை,இயக்குநர் ராம் தமிழ் எம் ஏ.

காரில் செல்லும் கால்சென்டர் இளைஞனை வெளியில் இழுத்துப்போட்டு தமிழ் செய்யுள் ஒன்றைச் சொல்லி அதற்கு அர்த்தம் சொல்லச் சொல்லும் தமிழ் தாண்டவம்...

"உனக்கு தைரியம் இருந்த இங்கே தொடு" என்று மேல் சட்டையில் ஆங்கிலத்தில் எழுதி அணிந்து வரும் ஐ.டி பெண்ணிடம் இதையே தமிழில் எழுதி தைரியமா நீ வெளியில நடமாட முடியுமா? என்று கேட்டு அந்த பெண்ணின் மார்பைத்தொடும் ஆத்திரம்...

25 வருஷத்துக்கு அப்புறம் வந்த கம்யூட்டர் படிச்ச 2 லடசம் சம்பளம் 3000 வருஷத்திற்கு அப்புறமா வந்த தமிழ் படிச்சவனுக்கு 2 ஆயிரம் சம்பளம்...

சிறையில் இருப்பனிடம் காவலர் "வெளியில சிகரெட் பிடிச்சாத்தான் தப்பு ஆனா அத இங்க பிடிச்ச தப்பில்ல" என்று சிகரெட் தரும் போலீஸ்...

தொடர் வண்டிப் பயணத்தின்போது தூங்குகின்ற பயணியிடம் பணம் திருடும் பயணச்சீட்டு பரிசோதகரை ஓடும் ரயிலிருந்து தள்ளி விட்டு கொல்லும் பச்சைப் படுகொலைகள் நிறைய....

படம் முழுக்க தொடர்கிறது...!

ஏழு வயதில் காதலி சொல்லும் "நெசமாத்தான் சொல்றியா?" ஹைக்கு வாசகம் மரணம் வரை தொடர்கிறது!....

ஏழு வயதில் தொடர்வண்டி குகைப்பாதை இருட்டுக்குள் ஒடிப்போய் செத்துப்போகிறது செல்ல நாய்.அவன் பார்க்கும் முதல் மரணம்!

வரிசையாக மரணம் துரத்தி அம்மா,அப்பா,அனாதையாக நின்றவனை தூக்கி வளர்த்த தமிழ் வாத்தியார்,தன் காதலியின் அப்பா மரணம்...என்று நீள்கிறது.

தனக்கு மருத்துவப் படிப்பு படிக்கும் தகுதியிருந்தும் தன் தமிழ் வத்தியாரின் நினைவாக தமிழ் படிப்பவனை...

தன்னிடம் சொல்லாமல் கூட போனக் காதலியைத்தேடி தாடி முடியோடு அலைந்து தேடிக் கண்டுபிடிப்பவனை...
மனித உறவுகளுக்கு அன்புக்கு மரியாதை கொடுப்பவனை...

பணத்தை வைத்து மனித உறவுகளை தேர்ந்தேடுக்கிற, வணிக நிறுவனங்களாக மாறி விட்ட "பணக்கார இந்தியா"வின் குடும்ப உறவுகளுக்கு மத்தியில்....

இப்படிப்பட்ட ஒருத்தனை ஊடகங்கள் மனநோயாளி என்று விமர்சனம் செய்வது எனக்கொன்றும் ஆச்சரியமாகத் தெரியவில்லை!

வாழ்க்கையும்,காதலையையும் என்னவென்று புரிந்து கொண்டு வாழத் தொடங்கும்போது...அவர்களை தேடி போலீஸ் படை வருகிறது.நீயாவது தப்பி பிழைத்துப்போ என்கிறான் காதலி மறுக்கிறாள்.இருவரும் செத்துப்போகிறார்கள்.

படம் முடிகிறது!

படம் முழுக்க அதீத சோகம் என்று விமர்சனம் செய்கின்றன,ஊடகங்கள்.

இந்த சினிமாவில் சொல்லப்பட்டதை விட அதிகமான துயரங்களோடுதான் மக்கள் வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற உணமை என்னைச் சுட...

எனக்கு தூக்கம் போனது....!









அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்!






எந்த ஊருக்கு போனாலும்
அம்மாவை நினைவுப்படுத்தி
விடுகிறது...
பசி!.

அன்பே
உன் இடையினம்
ஒரு மெல்லினம்
இதயம் மட்டும்
ஏனோ வல்லினம்
மெய்யேழுத்தெ
பொய் எழுதிப்போகாதே

அன்பே
நான் உனக்கு எழுதிய
காதல் கடிதத்ததை
கள்ளத்தனமாய்
படித்த தமிழாசிரியரான
உன் அப்பா
"சந்திப் பிழை"
என்றால் சரியென்றிருப்பேன்
ஆனால்,நம்
சந்திப்பே அல்லவா பிழை என்கிறார்!

சப்பானில் மருத்துவ படிப்பு வரை எல்லா படிப்புகளும் தாய் மொழியான சப்பானிய மொழியில் மட்டுமே கற்றுத்தரப்படுகிறது.

நம் ரத்த ஜீன்கள் கூட தாய்மொழி வழி கல்வியைதான் எளிதாக ஏற்றுக்கொள்ளுமாம்.

உங்கள் மடிக்கனிணி(laptop)தொலைந்து விட்டதா?உங்கள் கனிணி இணையத்தளத்தில் இணையும்போது உங்களால் உங்கள் மடிக்கனிணியில் உள்ள தகவல்களை மீடக முடியும்.gps வழியே தகவல்களை அழிக்கவும் முடியும்.(www.mylaptopgps.com)









திக்குக்க ளெட்டும்


கராத்தே,குங்குபூ போன்ற தற்காப்புகலைகள் தென்தமிழ் நாட்டிலிருந்துதான் கீழ்திசை நாடுகளுக்கு சென்றுள்ளன.

கணவரால் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் 40 சதவீதம்..

பசிக்கொடுமையை ஒழிப்பதில் பொதுவுடைமை நாடான "கியூபா"முன்னணியில் இருக்கிறது.

அரசியல் என்பது தன்னைத்தானே தியாகப்படுத்திக் கொள்வது.ஒரு நாட்டையோ,மாநிலத்தையோ நிர்வகிப்பதற்கு சுயநலமற்ற தன்மை வேண்டும்.நானோ முழுக்க முழுக்க வர்த்தக ரீதியிலானவன்
-நடிகர் ஷாருக்கான்

"பெரியார்"திரைப்படம் ஒரு விருந்து மாதிரி.அந்த விருந்தில் ,நான் கடவுள் எதிர்ப்பு கொளகையை எடுக்காமல்,மற்ற நல்ல கொள்கைகளை எடுத்துக்கொண்டேன்
-நடிகர் ரஜினிகாந்த்

படுக்கையில் இருந்து சிகரெட் பிடித்துக்கொண்டே அசந்து தூங்கியவர் சிகரெட் தீயால் சாம்பலானர்.

No comments:

Blog Archive