Website Hit Tracking

Friday, February 8, 2008




எப்பொழுது ஒரு வேலையை நீயே செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ,அந்த நிமிடமே அந்த வேலை முடிந்தது என்று அர்த்தம்.






கீதை படிப்பதை விட கால்பந்து விளையாடுவதை வரவேற்கிறேன்.

-சுவாமி விவேகானந்தர்












ஹைக்கூ பார்வை

ஜாக்கி சானின் கதை-1




கொலை வெறியோடு...
எதிலும்...
போதை,ஊக்க மருந்துகளைக் கூட உடலில் செலுத்தி,எதைச் செய்தாவது எல்லாத் துறைகளிலும் முதலிடம் எங்களுக்கே என்கிற அமெரிக்கர்களை வெறும் கை,கால்களை மட்டுமே ஆயுதமாக்கி,அதைப் பொய்யாக்கி,அந்த தவிடு பொடி,தூசுகளுக்கு மத்தியில் கம்பீரமாக எழுந்தவன்,நம் ஜாக்கி!

மருத்துவ மனையில் பிறந்தவுடனே,அவன் பிறக்க உதவிய மருத்துவருக்கே வெறும் 20 டாலருக்கு விற்க முயன்றார்,அவனது அப்பா.அவ்வளவு கொடிய வறுமை!

பிறகொரு நாளில் அந்த முயற்சி தான் வென்றது!

அப்படி வளர்ந்த ஜாக்கி சான் தான் இன்று தன் மகனைப் பற்றி உலகத்துக்கே தெரியாமல் யாரேனும் பணம் கேட்டு கடத்தி சென்று விடுவார்கள் என்று பயந்து இரகசியமாக இன்றும் கூட தன் பாதுகாவலர்களையும் அனுப்பி வைக்கிறார்,ஜாக்கி.

அந்த உழைப்புக்கும்,உயர்வுக்கும் ஜாக்கி கொடுத்த விலை,யாராலும் கொடுக்க முடியாத விலை மட்டுமில்லை.அதிர்ச்சியானதும் கூட...

இன்றும் கூட அவரின் ஒரு படம் வெளியானதும் ,அதைப் போன்றே குறைந்தது மூன்று படங்களாவது,அவரின் படச் சாயலில்,அவரை இந்த உலகத்துக்குப் பெற்றுத் தந்த சீனாவில் வெளிவருகிறது.ஜாக்கி ஒர் உந்துசக்தி!

அமெரிக்காவில் spider man,super man கார்டூன் படங்கள் புத்தகங்களாக வந்து பிற்பாடுதான் தொலைக்காட்சி தொடர்களாக திரைப்படங்களாக வந்தன.

ஆனால் ஜாக்கி படத்தில், தன் அதிரடி நடிப்பால் உயர்ந்த பிறகு தான் கார்டூன் புத்தங்களாக திரைப்படங்களாக சக்கைப் போடு போடுகிற அதிசயம் நடந்தது...!
தான் நேசிக்கிற தொழிலுக்கு தன்னுடைய உயிரையும்,உடலையும் கொடுக்க முன் வருகிற ஒரு வார்த்தை உயிரேழுத்துக்குப் பெயர் தான்...
"ஜாக்கி சான் !"
இதையே இனி நாம் ஜாக்கியின் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ளப் போகிறோம்.

கடின உழைப்பை யாராலும் தோற்கடிக்கவே முடியாது என்று சொல்லி நீண்டு கொண்டே போகிறது ஜாக்கியின் வாழ்க்கை வரலாறு...

ஜாக்கி சான்
7-4-1954 இல் பிறந்தார்.


அதிரடிப் பார்வை தொடரும்....
























எழுக தீ !






மனிதர்களை தவிர ,இயற்கை அழிவுகளை முன் கூட்டியே கண்டு பிடிக்கும் சக்தி மற்ற உயிரினங்களுக்கு இருக்கிறது என்று நிரூபித்திருக்கிறது,அறிவியல்.

அந்த மிருகங்களையே நிமிடத்திற்கு நிமிடம் பட்டாசு வெடித்து நடு நடுங்க வைக்கிறான் ,நம் தமிழன்-தீபாவளி என்று.

சங்க காலம் முதல் பார"தீ" காலம் வரை தீபாவளி பற்றிய பாடல்களே இல்லை.அந்த தீபாவளிக்கு வெடித்து கரியாகும் பட்டாசுகளைப் போலவே தீபாவளிக்கான கதையும் மூடத்தனமானது.அது தமிழ் பண்டிகையே அல்ல!

தமிழனுக்கென்று ஒரு விழா ஒன்று உண்டா என்றால்,உண்டு!தன் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் இயற்கை சக்திகளுகளான சூரியன்,ஆடு மாடுகளுக்கு தன் அறுவடைத் திருநாளில் நன்றி செலுத்துவதற்கான ஒரு விழா என்று பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டிய மிகச் சிறப்பான அர்த்தமுள்ள விழா இந்த பொங்கல்!

உலகத் தொழில்களுக்கெல்லாம் முதன்மையானது உழவுத்தொழிலே என்று கம்பீரத் தமிழன் திருவள்ளுவர் தன் சாகாத தமிழில் சொல்லி செத்துப் போனார்...
.....அந்த விவசாயிகள் தற்கொலை செய்து செத்துப் போவது தெரியாமல்....

இந்த வருடத்திலிருந்தாவது வீட்டுக்குள்ளிருந்து தெருவின் மேல் எச்சில் துப்புகின்றது போன்ற நம் அழுக்குச் சிந்தனைக்களுக்கு எதிராக தீ வைப்போம்.அந்த நெருப்பின் வெளிச்சத்தில் புதுவருடம் சுடர் விட்டு பிரகாசிக்கட்டும்!


எழுக தீ !

No comments:

Blog Archive