Website Hit Tracking

Sunday, October 21, 2007



வானம் வசப்படும்



சாலமன் பாப்பையா பட்டிமன்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் முன்பு கூச்சப்பட்டு பேச திணறி மேடையை விட்டு கீழ் இறங்கிப் போய் விட்டேன்.இப்படித்தான் ஆரம்பித்து என் முதல் மேடைப்பேச்சு....

பட்டி, தொட்டி, டிவி பெட்டியிலும் கூட கலக்கும்
"திண்டுக்கல் ஐ.லியோனி"


40-ஆம் ஆண்டு சே குவேரா நினைவு நாள்



எங்கள் கனவுகளுக்கும்.....
எங்கள் ஏக்கங்களுக்கும்...
உயிர் வந்து...........!

உன்னால்.....!



பாரதிகிருஷ்ணகுமார் bharathikrishnakumar.blogspot.com


தஞ்சை வெண்மணி படுகொலை, கும்பகோண பள்ளித்தீ விபத்து போன்ற கொடூர உண்மைச் சம்பவங்களைத் தோண்டி,தன் குறும்படங்களில் பதிவு செய்து,நடிகர் கமலஹாசன்,நடிகர் பிரகாஷ்ராஜ் போன்றவர்களும் ஆனந்த விகடன்,குங்குமம்,நக்கீரன்,தினமணி,தீக்கதிர்,the hindu போன்ற பத்திரிக்கைகளாலும் பாராட்டப்பட்ட...

கவிதையாய்,கண்ணீராய்,அருவியாய்,தென்றலாய்,இடி மின்னலாய்,பூவாய் எல்லோரையையும் கட்டிப்போடும் மயக்கும் பேச்சுக்குச் சொந்தக்காரன்,இலக்கிய மேடைகளில் பீரங்கியாக முழங்கும் முற்போக்கு எழுத்தாளர்,வாலிபர் சங்கங்களின் மனிதநேய சட்டை போட்ட...

குருட்டு,இருட்டு தமிழ்வானில் மின்னக் காத்திருக்கும்

சிவப்பு
நம்பிக்கை நட்சத்திரம்....


"இவன் மேடைப் பேச்சைக் கேட்டு இப்ப க்கூட ,மிரண்டு போறேன்" என்று தன் குரு இயக்குநர் இமயம் "பாரதிராஜா" அவர்களால் பாராட்டப்பட்ட...



இயக்குநர் "பாரதிகிருஷ்ணகுமார்" அவர்களைப் பற்றிய முழுமையான விவரங்கள் www.bharathikrishnakumar.blog.com-ல் மலர இருக்கிறது ,காத்திருங்கள்!

உன் உயரம் போல்
உன் தமிழ் போல்
உயரட்டும் தமிழ்நாடும்
உன்னால்...........!

_ஆதிசிவம்.









மண்ணுக்குள் இருந்து வந்தது
உயிரோடு புதைக்கப்பட்ட
பச்சைப் பிஞ்சு குழந்தையின் அழுகுரல்
தோண்டிப்பார்த்தால்
அது
பெண் குழந்தை!
(உத்திரப்பிரதேசத்தில் நடந்த, தோண்டி எடுத்த உண்மை, என்னை கண்களை கலங்க வைத்து,கவிதை எழுத வைத்தது)

-ஆதிசிவம்.



காதலும் சரி
பேருந்தும் சரி
சரியான சில்லறையுடன்தான்
பயணிக்கச் சொல்கின்றன




(காதலி,காதலனிடம்... )
நீங்கள் என்னைக் காதலிப்பது உண்மையென்றால்,என் திருமணத்துக்குக் கண்டிப்பாக வரவேண்டும்.



அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்!


குப்பைத்தொடியையே
சுற்றிச் சுற்றி வருகிறது
அனாதை குழந்தை
தொட்டில் பாசம்!

வானத்தை
நீரில்
உடைத்தது
மீன்கொத்திப்பறவை!

கருவறை போ என்றது
கல்லறை வா என்றது
பெண் சிசு



திக்குக்க ளெட்டும்



இணையதளங்களில் மூலம் இணையும் திருமணங்கள் 60 சதவீத்திற்கு மேல் விவாகரத்து பெற முயன்று வருகிறார்கள்.

இன்னும் 40 ஆன்டுகளுக்குப் பிறகு விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காது.

உலகிலேயே புத்தருக்கு தான் அதிகமான சிலைகள் உள்ளன.

தன் வளர்க்கும் மரத்துக்கு கேக் வெட்டிக் கொண்டாடி வருகிறார்,ஒரிசா மாநிலத்தில் உள்ள ஊர்மிளா பெஹரா என்ற பெண்.

அமெரிக்காவின் தேசிய கீதத்தை எழுதியவர் ஒரு ரஷ்யர்










சிரிப்பும்,அழுகையும் வாழ்க்கையின் தோழர்கள்!

-நெப்போலியன்

No comments:

Blog Archive