Website Hit Tracking

Friday, September 28, 2007

"பூவே ஒர் ஆயுதம்!" கவிதை




தமிழ்,தமிழன்,தமிழ்நாடு




ஒரே நோக்கத்தை கொண்டிருப்பவர்கள் விரைவிலேயே வெற்றி பெறுவர்கள்!

பெரிய விஷயங்களை விட சின்ன விஷயங்களே நம்மை அதிகம் காயப்படுத்தும்.நீங்கள் மலையின் மீது எளிதாக உட்கார்ந்து விடலாம்.ஆனால் குண்டூசி மீது உட்கார முடியாது!



கடந்த வாரத்தில் இந்த வலைத்தளத்தை நான் எதிர்பார்த்தை விட அதிகம் பேர் பார்வையிட்டு போயிருக்கிறார்கள் என்பதை அறிந்து,மனதுக்குள் பயம்,கூடுதல் பொறுப்பு வந்திருக்கிறது.

இந்த வலைத்தள வடிவமைப்புக்கு நிறைய சோதனை முயற்சிகளை செய்து பார்த்தேன்.சில வடிவமைப்பு முயற்சிக்கு இந்த வலைத்தளம் ஆதரவு தரவில்லை என்றாலும் இந்த குறைகள் இனி வருங்காலத்தில் சரியாகும் என்று நம்புகிறேன்.என் சோதனை முயற்சிகள் முடியாது தொடரும்...

தமிழ்வெளி(www.tamilveli.com),தேன்கூடு(www.thenkoodu.com) போன்ற தமிழ் இணையத் தளங்களை தொகுத்து அறிமுகப்படுத்துவதையே வேலையாக கொண்ட இந்த இரண்டுதளங்களும் என்னுடைய இந்த வலைதளத்தையும் அங்கீகாரம் வழங்கி ஏற்றுக்கொண்டுள்ளது என்பது இனிப்புச்செய்தி!

மனிதனை,மனிதநேயத்தை நேசிக்கிற யாருக்கும் தோலவியே கிடையாது!





நோக்கியா மொபைல் போனில் தமிழில் மின்னஞ்சல் அனுப்ப முடியும் முயன்று பாருங்கள்!
-ஆதிசிவம்.


தமிழ்,தமிழன்,தமிழ்நாடு





உங்களைப்போலவே
எனக்கும்
பூக்களை ரொம்ப பிடிக்கும்!
எல்லாம் பார்த்து
சிரித்துகொண்டே இருப்பதால்...!

லண்டனில் இருக்கும் இந்திய பெண் அம்ரித் லால்ஜி மூக்குத்தி (மத அடையாளந்தான் என்றாலும்)அணிந்து வேலைக்கு வரக்கூடாது என்ற மிரட்டலுக்கு பணியாமல் பார்த்த வேலையையே தூக்கி எறிந்த ,அந்த இந்திய அடையாளத்தை தொலைக்க விரும்பாத, புரட்சிப்பெண்ணுக்கு
ஒரு இந்திய வணக்கம்!







கவிதைச்சாரல்!

அகத்தையும் காட்டுமெனில்
யாரும்
பார்க்க மாட்டார்கள்
கண்ணாடியை

கடலுக்குள் சென்று
கரையும்வரை
கலவரம் வராதிருக்குமா?
கவலையோடு விநாயகர்!

கடலைக் காட்டுவதற்க்காக
கூழாங்கல்லை
உருட்டிச்சென்றது
நதி!

வாடிய
பயிரைக்கண்டவுடன்
வந்தது
வள்ளலார் ரியல் எஸ்டேட்!

சுதந்திர தினம்
இனிப்புக் கொடுத்தார்கள்
சிறைக்கைதிகளுக்கு...!








திக்கெட்டும்

லாட்டரில் விழுந்த பணத்தை வாங்க மறுத்தார் ஒரு வெளி நாட்டுக்காரர்.(காரணம் என் மனைவிக்கு லாட்டரிச்சீட்டு வாங்கும் பழக்கம் இருந்தது.அவள் இறந்த பிறகு அவள் நினைவாக லாட்டரி வாங்கினேன்.எனக்கு உறவுகள் என்று யாரும் கிடையாது.அவ்வளவு பணத்தை என்னால் செலவு செய்ய முடியாது.)

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு அதிக மதிப்பு,மரியாதை.காரணம் இந்தியக் கலாச்சாரம்.
-சுருதி கமலஹாசன்.






No comments:

Blog Archive