Website Hit Tracking

Wednesday, September 26, 2007

"கடந்த காதல்"-கவிதை



மழை பெய்வது பொதுநலம்!
குடைப் பிடிப்பது சுயநலம்!
-தந்தை பெரியார்




எல்லோருக்கும் வெற்றி கிடைப்பநில்லை
ஆனால்
வெற்றி பெறக்கூடிய தகுதி எல்லோருக்கும்
உண்டு!
-அப்துல் கலாம்.



கடந்த காதல்

என்னை
ஆணியில் கிழித்து
கசக்கி
குப்பைத் தொட்டியில்
தூக்கிப் போட்டுப போகிறது
ஒவ்வொரு நாளும்....
உன் நினைவுகள்....!
_அன்பே சிவம்.
(இலவச டிவி வழங்கிய முதல்வர் செப்டம்பர் 15-ல் தன் சொந்த குடும்ப "கலைஞர் டிவி"யை தொடங்கினார்.)

சுதந்திரம் வாங்கி
60 வருடங்கள்
ஆன போதும்....

பேரனுக்கு பல டிவி
சன் டிவி

தாத்தா உனக்கு
ஒரு கலைஞர் டிவி!

நாங்கள் இன்னும்
வாங்குகிறோம்
"இலவச டிவி!"

-அன்பேசிவம்.




கவிதைச்சாரல்


பாம்பைக்கூட சாப்பிட பழகிய மனிதன் மனித கறி சாப்பிடுவதில்லையே ஏன்?

பாம்புக்கு பல்லில் மட்டுந்தான் விஷம் .மனிதனுக்கு உடம்பெல்லாம் என்பதை நம்புகிறான் போலும்.
-வைரமுத்து.


காதல் பிரிவு!

உனக்கென்ன போய் ஓழிந்தாய்
பிரிவென்னும் வாணலியில் வறுபடுகிறது
இதயம் என்னும் இறைச்சித் துண்டு!

பிரேதப் பரிசோதனையிலும்
புலப்படவில்லை
இறந்துபோன
அந்த அனாதை சிறுவன்
என்ன சாதியென்று

தாத்தாவைப் புதைத்துவிட்டுக்
குளித்த நதி
தொலைந்து போயிருக்கிறது
அம்மாவைப் புதைத்துவிட்டு
திரும்பும்போது...

எல்லோரும்
காதலிக்கிறார்கள்
பின்னொரு நாளில்
சிலர் சேரந்தற்காக
சிலர் பிரிந்தற்காக

கடவுளுக்கு
மொட்டை அடித்துக்கொள்கிறான்
மனிதன்
மனிதனுக்காக
ஒரு மயிரையும்
தர
தயாராய் இல்லை கடவுள்!

மிகச் சரியாய்
இசைக்கும்
இசைக்கருவிக்கு
இங்கே எவன்
பெயர் வைத்தான்
"தப்பெ"ன்று?





திக்கெட்டும்


தமிழ்நாட்டிலும்,இந்தியாவிலும் வாழும் மக்கள் தொகைக்கு சம்மான தமிழர்கள் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள்

சென்னை டைட்டல்பார்க் இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் பூங்கா,ஹைதராபாத்தில் உள்ள "ஹைடெக் சிட்டி"யை விட மூன்று மடங்கு பெரியது.

அமெரிக்க மென்பொருள் துறை வேலையில் இருக்கும் இந்தியர்கள் தாய்நாடு திரும்ப ஆர்வம் காட்டுகிறார்கள்.அந்த நாகரீக சூழலில் இருந்து தங்கள் பிள்ளைகளை காக்க,இந்திய சூழலில் படிக்க வைக்க....

அமெரிக்காவில் 5 சதவீதம் பேர்களுக்கு ஆங்கிலம் தெரியாது!

No comments:

Blog Archive