Website Hit Tracking

Saturday, September 15, 2007






கற்றது கம்யூட்டர் அளவு
கல்லாததது இண்டர்நெட் அளவு!





கவிதைச்சாரல்

*தமிழ் கவிதைகளின் உயரந்தான் தமிழின் உயரம்!
-வைரமுத்து.

*மனித இனத்திற்கு கவிதைகளே வழிகாட்டியாக இருக்க வேண்டும்!
-அப்துல்கலாம்.
*எதிர் எதிர் வீட்டில் குடியிருந்தும்
நேற்று போட்ட சண்டையில்தான்
தெரிந்து
நாம் சொந்தகாரர்கள் என்று!

*கூடு திரும்பும் பறவை
ஏமாந்து போகும்
வெட்டப் பட்ட மரம்!

இன்று நீ...
என்னை
மவுனமாக
கடந்து போனாலும்

ஆறுதல் சொல்லிப் போகிறது
உன் கொலுசு....!




சிரிப்பு


ஒரு கஞ்சன் இன்னொரு கஞ்சன் வீட்டுக்கு சாப்பிடப் போயிருந்தான்....

உங்க வீடல நீங்க சாப்பிட்டு வந்திருப்பீங்க...நான் சாப்பிடச் சொன்னா சாப்பிடவா போறீங்க?...

நான் சாப்பிடாம போனா நீங்க என்னை சும்மாவா விடுவீங்க...?

அப்படியே சாப்பிட்டாலும்,நீங்க சைவந்தான் சாப்பிடுவீங்க, அசைவச் சாப்பாட்டையா சாப்பிடப் போறீங்க....?அப்படியே சாப்பிட்டாலும் என் பையன் பாக்கெட்ல பணத்த வைக்காமலா போயிருவீங்க....?

நான் அப்படியே பணத்த வைச்சாலும் உங்க பையன் திருப்பி தராமலா போயிருவான்..நீங்க உங்க பையன அவ்வளவு கேவலமாவா வளத்திருப்பீங்க....




திசை எட்டும்


*சூரிய உதயத்தை முதலில் பார்க்கும் நாடு?
ஜப்பான்

*கிராமத்தில் வாழும் 73 சதவீத மக்களுக்கு 25 சதவீத மருத்துவ உதவி தான் கிடக்கிறது!

*இந்தியாவில் தனிநபர் வருமானம் அதிகமுள்ள மாநிலம்?
பஞ்சாப்

*காரல் மார்க்ஸ் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் 12 பேர்!

*இந்தியாவின் மக்கள் தொகை 113 கோடி அதில் 83 கோடிப்பேர் வெறும் 20 ரூபாய் சம்பளத்தில் வாழக்கையை ஓட்டுகிறார்கள்!

*இந்தியாவில் மும்பையில்தான் இணையதளங்களை பார்வையிடுபவர்கள் அதிகம்.

No comments:

Blog Archive