Website Hit Tracking

Friday, September 7, 2007

பெண்

* ஆண் ஆசிரியர்களை விட பெண் ஆசிரியர்களிடம் படிக்கும் மாணவர்களே படிப்பில் சிறந்து விளங்குகிறார்கள்
-கனடா ஆராய்ச்சி

* காட்டுக்குள் கூட்டமாக செல்லும் யானைகளில்,முன்னே போகும் பெண் யானைகளே தலைமை தாங்கிச் செல்லும்!.

இந்தியாவில் ஒவ்வொரு ஏழு நிமிடத்திற்கும் ஓரு பெண் பிரசவத்தின் போது மரணமடைகிறாள்.





ஆங்கில பட விமர்சனம்
த ஹோஸ்ட் the host


பரிசோதனைக்கூடத்தில் கால அளவு முடிந்த திரவங்களை சிறு சிறு உயிர்கள் அழியும் அபாயம் பற்றி கவலைப்படாமல் அழிக்கச் சொல்கிறார் ஒரு விஞ்ஞானி.இன்னொரு விஞ்ஞானியோ"எல்லா உண்மைகளையும் சொல்ல முடியாது.நான் தப்பு செஞ்சுட்டேன்"என்று கடலுக்குள் தானே விழந்து செத்துப் போகிறார்.

அதே கடலுக்குள் இருந்து கிளம்புகிறது ஒரு யானை வடிவ மீன்...மனித வேட்டைக்குக் கிளம்புகிறது...அதற்கு கால்கள் வேறு வைத்து ஓட விட்டு அழகு பார்த்திருக்கிறார்கள்.

ஒரு சிறுமியை தன் வாலில் தூக்கிப் போய் இரை கிடைக்காதபோது தின்பதற்காக ,ஒரு தப்பிக்க முடியாத கான்கீட் பள்ளத்திற்குள் கொண்டு சேர்க்கிறது.அங்கு ஏற்கனவே அந்த மீன் கக்கி தூக்கிப் போட்ட செத்த மனித கும்பல்.அதில் அபூர்வமாக உயிர் பிழைப்பது அந்த சிறுமியும்,இன்னொரு அனாதை சிறுமியுந்தான்.

அந்த சிறுமியைத் தேடி அப்பா,தாத்தா,அத்தை என குடும்பமே கிளம்பிப்போய் காப்பாற்றி அந்த யானை மீனை தீ வைத்து அழிக்க....படம் முடிகிறது.
தங்கள் செய்த தவறான அறுவைசிகிச்சையால் இறந்தவர்களைப் பற்றிய உண்மைகளை மறைக்க வைரஸ் கிருமி ஊரெல்லாம் பரவியிருக்கிறது என்று பொய் சொல்லி தப்பிக்கிற மருத்துவர்களின் தந்திரம்.
மூடியிருக்கும் கடைக்குள் நுழைந்து பசிக்குத் திருடும் அனாதை சிறுவன்,தன் தங்கையிடம் பசிக்குத்தான் திருட்டு... பணத்தை எல்லாம் திருடக்கூடாது என்று வறுமை சொல்லும் நேர்மை...!
அசத்தல்!
சுற்று சூழல் பற்றி கவலைப்படாத சுயநல மனிதர்களை அழிக்க நம் இயற்கை அன்னையே நிச்சயம் இப்படி அழிவு சக்திகளை எழுப்பி அழிப்பாள் என்பதை நாம், நம்ப மறுத்தாலும், நம்ப வேண்டிய உண்மை!



கவிப்பேரரசு


நான்மறை கற்றவன் அல்லன் ஞானி;நான் மறைய கற்றவனே ஞானி!
_வைரமுத்து



பாராட்டு

மதுராவயல் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் நடிகர் விஜய்,இயக்குனர் ஷங்கருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் (27.08.2007)வழங்கியது!_ செய்தி.

இதைக்கேட்டு எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்து உங்களைப்போலவே.நல்லவேளை விஜய்க்கு நடிப்புக்கு விருது தராமல் சமூகசேவைக்கும், ஷங்கருக்கு இயக்குனருக்காகவும் விருது தராமல் தன் படங்களில் ஆங்கில பட அளவுக்கு "பிரமாண்டம்" காட்டியதற்கும் விருது வழங்கி தன் கவுரவத்தை காப்பாற்றிக்கொண்டது, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம்.

இந்த இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது,நாம் பெருமைப் பட்டுக்கொள்ள..
பணத்தை குறி வைத்தே தங்களின் எல்லா நடவடிக்கைகளையும் அமைத்துக்கொள்வார்கள்!

பால் வாங்கக் கூட காசில்லாமல் வளர்ந்த, வறுமைக்கு பிறந்த விஜய்,ஜென்டில்மேன் படம் முதல் சிவாஜி வரை படிக்க வசதியில்லாமல்...கண்ணீர் பளபளக்க அழவானே ஒரு சிறுவன்...அது ஷங்கர் அவர்களே! நீங்கள்தான் இல்லைய்யா?

தன்னை இந்த உயரத்திற்கு உயர்த்தியவர்களுக்கு பெரிதாக என்ன செய்து விட்டார்கள் என்று

யோசித்துப் பார்த்தால்....
யோசித்துப் பார்த்தால்....
யோசித்துப் பார்த்தால்....

பெருமைப் படமுடியவில்லை!



செய்தி வேட்டை!



*திறமையான இந்தியர்களை விட வேண்டாம்.குடியுரிமை அளித்து அவர்களின் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
_அமெரிக்கா எச்சரிக்கை.

*உலகிலேயே அதிக மனநோயாளிகள் அமெரிக்காவில் தான் அதிகம்.குறிப்பாக பாஸ்டன் நகரில்!

*பன்னாட்டு நிறுவனங்கள் முற்றிலும் கல்வி தகுதியின் அடிப்படையில் வேலை தருவதில்லை.நல்ல தோற்றமுள்ள ஆண்கள்,பெண்களை மட்டுமே வேலைக்கு எடுத்துக் கொள்கின்றன!

விவாகரத்து...

புது டெல்லி முதலிடம்
மும்பை இரண்டாமிடம்
பெங்களூரு மூன்றாமிடம்
கொல்கத்தா நான்காமிடம்
சென்னை ஐந்தாமிடம்

No comments:

Blog Archive