Website Hit Tracking

Saturday, September 1, 2007

உலக சினிமா

"என்னை அழவைத்த இந்த உலகத்தை சிரிக்க வைக்கவே நான் இந்ததுறைக்கு வந்தேன்!"

-சார்லி சாப்ளின்.



சினிமா விமர்சனம்
பள்ளிக்கூடம்

"வாழ்க்கையை விட திரைப்படம் மேன்மையானது!"

இப்படித்தான் ஆரம்பிக்கிறது, பள்ளிக்கூடம்.

தன் எழுதிய "களவாடிய பொழுதுகள்" நாவலை தானே களவாடி பிலிம் சுருளுக்குள் அடக்கி இருக்கிறார்,தங்கர்பச்சான்.

மூடப்போகும் பள்ளிக்கூடத்தை, பழைய மாணவர்கள் ஊர் திரும்பி, மீட்பதுதான் கதை!இதில் அழுது வடியும் காதல் வேறு!
கிழிந்த சட்டைக்கு முள் குத்தி பள்ளிக்கு செல்லும் சிறுவனின் சோகம்,பள்ளிக்கூடம் மட்டும் போகச் சொல்லாதே என்று கதறும் தன் மகனைப்பார்த்து நெஞ்சு வெடிக்க அழும் அப்பாவின் அழுகை இன்னும் தொடரும் அவலம்!....

நாடகம்!

"சிவாஜி" களின் கிராபிக்கஸ் கோட்டைகளுக்கு முன்னால் நம் பள்ளிக்கூடங்கள் இடிந்து போகலாமா?
மண்ணின் மகன் தோற்றுப்போகலாமா?...



அம்பலம்


மொபைல் கம்பெனிகளின் மோசடி!

தனியார் மொபைல் கம்பெனிகளின் முதலாளிகள் நம் இந்தியாவின் மக்கள் தொகையை நம்பி நிறைய சலுகைகளை அள்ளி விட்டு இப்போது எதிர் பாத்த லாபம் கிடைக்காததால் , உள்,வெளிமாநில அழைப்புகளின் கட்டணங்களையும்,

பழக்கப்படுத்து!
பழக்கத்துக்கு அடிமையாக்கு!!
மண்டியிட வை!!!


என்ற மோசடி வழியை கடையைப்பிடித்து..
sms கட்டணங்களையும்,ஏர்செல் ஏர்டெல்,ஹட்ச் போன்ற நிறுவனங்கள் உயர்த்தியிருக்கின்றன
எச்சரிக்கை!

அழைப்புக்கட்டணங்கள் மூலம் வரும் வருமானத்தை விட sms மூலம் வரும் வருமானமே அதிகம்!



தகவல்

புள்ளி விவரம்!
1947 ஆம் ஆண்டில் 2007-ல்

மக்கள்தொகை 30 கோடி 113 கோடி
சராசரி வயது 32 ஆண்டு 65 ஆண்டு

கம்பியூட்டர் துறைகளில் வேலையில் இருப்பவர்களில் விவாகரத்து செய்வோர்
சென்னை 40 சதவீதம்
பெங்களூரு 100 சதவீதம்

உலக அளவில் ஆங்கில நூல்கள் அதிகம் விற்பனையாகும் நாடு?
இந்தியா!

உலக அளவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஆங்கிலம் எத்தனையாவது இடம்?
மூன்றாவது இடம்!

No comments:

Blog Archive