Website Hit Tracking

Friday, August 24, 2007

சினிமா விமர்சனம்


transformers-ட்ரான்ஸ்பார்மர்

அமெரிக்கா இராணுவ எச்சரிக்கையை மீறி ராணுவ முகாம் நோக்கி தரை இறங்குகிறது, ஒரு விமானம். அந்த விமானம் மின்சார கம்ப உயரத்திற்க்கு உயர்ந்து இயந்திர மனிதனாக மாறி நிமிர்கிறது.அது தாக்குதலை தொடங்க படம் ஆரம்பிக்கிறது.

தீய சக்தி ரோபாட் கூட்டத்திற்கும் , நல்ல சக்தி ரோபாட் கூட்டத்திற்கும் இடையே கடும் சண்டை.அவர்கள் கிரகத்தைச் சேர்ந்த சதுர வடிவ பொருள் ஒன்று யார் கையில் சிக்குகிறதோ அவர்களே எல்லா கிரகத்துக்கும் கடவுள்!

அதைத்தேடித்தான் தீப்பிழம்பாக எரிந்தபடி பூமிக்கு வருகிறார்கள், இயந்திர மனிதர்கள்.நல்ல சக்தி ரோபாட்டுக்கு உதவுகிறார்கள் ஹீரோவும்,ஹீரோயினியும்..

சாலையோரம் நிறக்கும் ரோபாட் காரை உற்றுப்பார்த்து நொடியில் காரின் உருவத்தை அடைதல்,விமானம், ஹெலிகாப்ட்டர் என உருவத்தை மாற்றி பூமியில் இறங்கும்போது இயந்திர மனிதர்களாக மாறி தரையில் குதிப்பது,இணையதளம் வழியே மனிதமொழி கற்று பேசும் புத்திசாலித்தனம் போன்ற ஹாலிவுட் அசத்தல்களும் உண்டு.

இறுதியில் மனித அன்புக்கு முன்னால் மண்டியிட்டு, அவர்களின் கூடவே இருக்க சம்மதிக்கிறது ஒரு மனித வடிவ ரோபாட்!

மனிதன் என்ற அடையாளங்களைத் தொலைத்து பணத்துக்கு முன்னால் மண்டியிடம் மனிதர்களை நாம் என்ன செய்ய போகிறோம்?


__அன்பே சிவம்



கவிதை அம்மா வலி!

சாப்பிடும்போது
சாப்பாட்டில் தலைமுடியாம்
கத்தினார் , "வழுக்கை தலை" அப்பா.

அம்மா காய்கறி நறுக்கும்போது
விரல் நறுக்கி
குழம்பில் கலந்த
ரத்தம் குடித்த
அப்பாவுக்கு எப்படி தெரியும்
அம்மா வலி?

__அன்பே சிவம்.

2 comments:

Anonymous said...

In my opinion you commit an error. I can defend the position.

Anonymous said...

You will not prompt to me, where I can find more information on this question?

Blog Archive