

அலெக்சாண்டர் உலகப் படையெடுப்பு துவங்குவதற்கு முன்பு தன் சொத்துக்களை எல்லாம் தன் நண்பர்களுக்கு பிரித்து கொடுத்து கொண்டிருந்தார்.
அலெக்சாண்டரின் நண்பர் கோபமாக கேட்டார் ''எல்லாவற்றையையும் மற்றவர்களுக்கு கொடுத்து விட்டால் உன்னிடம் மீதம் என்ன இருக்கும்?''
அலெக்சாண்டர் கம்பீரமாகச் சொன்னார் ''நம்பிக்கை....!'' என்று.

விமர்சனம்
''அறை எண் 305-இல் கடவுள்''
கதை:கடவுள் இரண்டு இளைஞர்களோடு தங்கி,புத்தி புகட்டி விட்டு மீண்டும் கடவுளாக மாறி காணாமல் போவது.
கதையின் கதை:பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு முறை,''இந்த சென்சார் குறுக்கீடு மட்டும் இல்லாமல் என்னைப் படம் எடுக்க அனுமதித்தால் இரண்டே வருடத்தில் ஆடசியைப் பிடித்துக் காட்டுவேன்'' என்றார்,
அப்படி சொன்னது மாதிரியே ஆட்சியைப் பிடித்து இன்று வரை தமிழ்நாடு நாசமாய் போனது தனி வரலாறு.
நிற்க.
''இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி''' பிறகு வந்த இரண்டாம் படம், இது.சரித்திர கால படம் மட்டுமல்ல கிராபிக்ஸ் கோட்டையும் கட்ட தெரியும் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயமோ என்னவோ, படம் முழுக்க கணிப்பொறியை நம்பி....
சென்னையில் ஆன்களுக்கான தங்கும் விடுதியில் நடக்கும் சம்பவங்களே கதைக்களம்.வேலை தேடி அலைவது,வாடகைப் பாக்கி,உணவு விடுதியில் கடன் என்று ஏற்கனவே பார்த்துப் பார்த்து சலித்துப் போன ஆரம்ப காடசிகள்...
வீட்டு மொட்டைமாடியில் பிரகாஷ் ராஜ் வடிவில் பிரகாஷமாக தோன்றுகிறார்,கடவுள்.
புதிய வேகத்தில்,புதிய பாதையில் வேகம் பிடிக்கிறது,படம்.
சிம்பு தேவன் ஒரு முடிவோடுதான் களம் இறங்கியிருக்கிறார்.அத்தனையும் வசனங்களும் சரவெடி!வெடித்து சிதறியிருப்பது அத்தனையும் போலியான நம்பிக்கைகள்.சிரித்த பிறகு இதுக்கு போயா சிரித்தோம் என்று வருத்தப் படத்தேவையில்லை.அத்தனையும் சிந்தனை முத்துக்கள்!
அந்த இரு இளைஞர்களின் கூடவே தங்கி, உங்கள் குறைகளை கண்டுபிடியுங்கள்.அதை சரி செய்யுங்கள்.முன்னேறுங்கள்!என்று தவறுகளை நேர்மையாக சுட்டிக்காட்டி,தூங்கிப் போகிறார்,கடவுள்.
அந்த இருவரும் கடவுளின் சக்தியிருக்கும் பெட்டியைத் திருடி,கண்டபடி ஊர் சுற்றி,நினைத்ததெல்லாம் செய்து விட்டு,மனிதர்களிடம் தோற்றுப் போய்,திரும்பவும் கடவுளிடம் வந்து சேர்கிறார்கள்.
அதுவரை கடவுள் சக்தியை இழந்த கடவுள்
உள்ளூர் பொறுக்கியை தூக்கிப் போட்டு மிதித்து,கடலை விற்று,மூடும் நிலைக்கு வரும் உணவு விடுதியை தன் உழைப்பால் தூக்கி நிறுத்துவது,தன் கழிவறையை தானே சுத்தம் செய்தும் என்று எல்லா கை தட்டல்களையும் பிரகாஷ்ராஜ் ஒருவரே பெற்று விடுகிறார்.
சேதி:கடவுள் ஒரு உதவாக்கரை.நீ முன்னேற நீ தான் முயற்சி செய்ய வேண்டும்!



அம்மா
என்னை தான் அம்மா
அடிப்பால்....
ஏனோ
அவள் முகத்தில்
வலி தெரியும்.....!
கடைசியில்
நிச்சயம் முத்தம்
கிடைக்கும்
ஏனோ
இன்னோரு தரம் அடிக்க மாட்டாளா- என்று
மனசு ஏங்கும்.....
ஒவ்வொரு பிறந்தநாளும்
அம்மாவின்
இனிப்போடு தான்
பிறக்கும்....
கடைசிவரை கேடகவே இல்லை
அம்மாவின் பிறந்த நாளை.....!
-ஆதிசிவம்.

ஆழ்வார்பேட்டை ஆண்டவன்
கமல் அவதாரம்.
நான் நடிகன்தான் ஆனால் என்னால் (முழு நேர நடிகர்கள்)அரசியல்வாதிகளைப் போல நடிக்க முடியாது.நான் நடிக்கும் நடிப்பை மக்களின் வாழ்க்கையிலிருந்து திருடுகிறேன் என்று சொல்லும் கமல் இதுவரை பல்வேறு அமைப்புகள்,நிறுவனங்கள் வழங்கிய விருதுகளின் எண்ணிக்கை 172 உலகில் இதுவரை இருந்தவர்கள்,இப்போது இருப்பவர்கள் யாரும் இவ்வளவு விருதுகள் பரிசுகள் பெற்றதில்லை.
26.4.08 அன்று சென்னையில் ''தசவாதாரம்'' படப் பாடல் வெளியிட்டு விழா நடந்தது.
''எனக்கும் படப்பிடிப்பின்போது 34 இடங்களில் எலும்பு முறிந்து இருக்கிறது'' என்றார், கமல்.
''கமலுக்கும் ஜாக்கி சானும் சில மாத இடைவெளியில், ஒரே தேதியில் பிறந்த அண்ணன்,தம்பிகள்''என்றார்,கலைஞர்.
''வணக்கம் சென்னை'' என்று தமிழில் ஆரம்பித்து கலக்கினார்,ஜாக்கி.
நான் உங்களோடு சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன்.நீங்கள் ஆகஷன் காடசிகளில் நடித்துக் கொள்ளுங்கள்.நான் காதல் காடசிகளில் நடிக்கிறேன் என்றார்,ஜாக்கி.
நடக்க முடியாமல் வந்த முதல்வர் கலைஞரை ஓடிப்போய் கைத் தாங்கலாக அழைத்து வந்தது,விழா மேடையில் கிடந்த குப்பைகளை பொறுக்கிப் போய் குப்பைத் தொட்டியில் போட்டு ஜாக்கியே விழாவின் நாயகன் என்ற பெயரை தட்டிச் சென்றார்.
இந்திய உணவுகளையும்,தண்ணீரையும் நான் மறுத்தேன் என்பது பொய் என்றும்...
ஹாங்காங் சீன இயக்குநர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.தசவாதாரம் படத்தை நிச்சயம் பாருங்கள்.இன்னும் முன்னைக் காட்டிலும் கடினமாக உழையுங்கள்.ஏனெனில் உலக ரசிகர்களை இந்திய சினிமா தன் பக்கம் திருப்பிக்கொண்டிருக்கிறது,என்று எச்சரித்தார்,ஜாக்கி தன் இணைய தளம் வழியே....
அதற்கு பெயர்தானே கமலஹாசன்!



இதயம் ரோஜா மலராக இருந்தால் வார்த்தைகளில் அதன் வாசம் தெரியும்.
-ரஷிய பழமொழி.

No comments:
Post a Comment