Website Hit Tracking

Sunday, February 24, 2008





உன் வெற்றி எது என்று தீர்மானி.அதுவே உன் வாழ்க்கை,கனவு என்று அந்த குறிக்கோளை ஒட்டியே வாழ்ந்து வா!மூளை,தசைகள்,நரம்புகள் என உன் உடலின் ஒவ்வொரு பகுதியிலும்,அதுவே நிறைந்திருக்கட்டும்.


-சுவாமி விவேகானந்தர்








(john rambo-4) "ஜான் ராம்போ-4"

ஆங்கில பட விமர்சனம்



இறுகிய, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முகம்,சிரிக்கவே தெரியாதோ என்று எண்ண வைக்கும் உதடுகள் என்று வரும் கதாநாயகன் சில்வஸ்டர் ஸ்டாலோனுக்கு வயது 61-க்கு மேல் என்றால் நம்பவே முடியவில்லை .அத்தனை இளமை !
உடலை இளமையாக்கும் அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட ஊசியை பயன்படுத்துவதாக அவர் மேல் குற்றச்சாட்டு வேறு இருக்கிறது.

"இதில் வரும் சம்பவங்கள் மியன்மார் நாட்டில் நடந்த சம்பவங்களை குறிபிடுவன அல்ல! " என்ற அறிவிப்போடு தொடங்குகிற படம் ஏமாற்றவில்லை !

இராணுவ பின்னணியில் பின்னி எடுக்கும் சில்வஸ்டர் ஸ்டாலோனின் ராம்போ பட வரிசையில் இதுவரை வந்த மூன்று படங்களையும் தானே முறியடித்த வெற்றிப் படம்,இது !


மியான்மர் அரசு அந்த நாட்டில் இந்த படத்தை தடை செய்திருக்கிறது.தன் நாட்டு மக்களை தன் நாட்டு இராணுவமே கொன்று குவித்த சம்பவங்கள், மியான்மர் மக்களை இந்தப் படம் மீண்டும் புரட்சிக்கு தயார்படுத்தி விடும் என்று அஞ்சி தடை செய்திருக்கிறது.இது ஒன்றே போதும் இந்த படத்தின் சிறப்பை உலகுக்குச் சொல்ல....

கையில் எந்த ஆயுதமும் இல்லாத அப்பாவி மக்களை இராணுவ லாரி ஒன்றில் ஏற்றி வந்து,மோதினால் வெடிக்கும் தண்ணீர் கண்ணி வெடிகளை வயலில் நிரம்பி இருக்கும் தண்ணீருக்குள் வீசியப் பிறகு, கட்டாயப்படுத்தி ஓட விட்டு,இரத்த பந்தாக வெடித்து சிதறி,அதில் தப்பியவ்ர்களை உட்கார வைத்து பின்புறமாக சுட்டுக் கொல்லும் காட்சிகளை பார்த்து நடுங்கி போகிறது மனசு...!

இராணுவ ஆட்சி நடக்கும் மியான்மார் போய் அங்கு அடிப்பட்ட மக்களுக்கு,அடிப்படை உதவிகள் மருந்து போட்டு ஆறுதல் சொல்ல ஒரு குழு பயணம் செய்கிறது.அந்த குழுவை கொண்டு செல்லும் படகோட்டியாக ஸ்டாலோன்.

அந்த குழு சேவை செய்யும் கிராமமே பீரங்கி குண்டுகளால்,தூள் தூளாக்கி,கை கால்கள் உடல் என சிதறி,ஒரு சிறுமியின் தலை மட்டும் ஒற்றை குச்சியில் குத்தி நிற்கும் அவலம் என ஆங்கில படத்துக்கான சிறப்பான காட்சியமைப்புகள்.

அந்த குழுவை பிடித்து கடத்தி போய் விடுகிறது அந்த நாட்டு இராணுவம்.

அந்த குழுவை மீட்க,அவர்களின் இராணுவத்திற்குள் ஊடுருவி புகுந்து,பீரங்கியை கைப்பற்றி.அந்த இராணுவத்தையும்,இராணுவத் தலைவனையும் ஒழித்துக் கட்டிகாத்து கிழியும் குண்டுகளின் சப்தங்களுக்கு இடையே குழுவையும் மீட்க....
படம் முடிகிறது.

யுத்த காட்சிகள் உண்மையான யுத்த களத்தை அவர்களுக்கே தெரியாமல் காமிரா கொண்டு படமாக்கியது போல அவ்வளவு துல்லியம்! கண்டிப்பாக பார்க்க வேண்டிய பட்டியலில் சேர்க்கிறது.

நமக்கும் பக்கத்தில் நடக்கும் இலங்கை சண்டையை ஞாபகபடுத்தாமல் இல்லை.

இந்த படத்தில் வரும் மியான்மார் மக்களுக்கும் கூட பிடித்த வாசகம் ....
"எதற்கும் பிரயோஜனம் இல்லாமல்,வாழ்வதை விட எதையாவது செய்வதற்கு சாகலாம்....!"



-சுபாஷ்சிவம்












ஹைக்கூ பார்வை
ஜாக்கி சானின் கதை-2






"கோங் சாங்" என்ற சீனப் பெயருக்கு பரந்த மனம் கொண்ட சுறுசுறுப்பானவன் என்று அர்த்தம்.இதுதான் ஜாக்கி சானின் உண்மையான பெயர்.

" ஜாக்கி சான்" என்ற பெயர் தனக்குத் தானே முடி சூட்டிக்கொண்ட பெயர்.
ஜாக்கியின் ஏழாவது வயதில் அவனின் பெற்றோர்கள் சீன அமைப்பின் ஆசிரியர் யூ சா யூ யெனிடம் ஒரு சொற்ப தொகைக்கு விற்று விட்டுப் போனார்கள்.அவர்களை வழி அனுப்ப விமான நிலையம் வந்த சிறுவன் ஜாக்கியின் இரு கண்களிலும் கண்ணீர்..
அம்மா அடித்தால் அப்பா மேல் முட்டி அழலாம்.அப்பா அடித்தால் அம்மா மேல் முட்டி அழலாம்

ஆனால் அந்த அழுகைக்கு காரணமே அம்மாவும் அப்பாவும் தான் என்ற போது யாராலும் ஆறுதல் சொல்ல முடிய வில்லை.அழுது அழுது கண்கள் வீங்கிய பிறகு தன் சட்டையைக் கொண்டு தானே கண்ணீர் துடைத்தான்.

கண்ணுக்கு முன்னால் புதிய உலகம் தெரிந்தது.எதற்கு அழ வேண்டும், அதுவும் சுத்த வீரன்?
அந்த நாடக அமைப்பில் அவனை போலவே நிறைய சிறுவர்கள்.அந்த அமைப்பில் பயிலும் மாணவர்கள் எல்லோருக்கும் சரியாகப் படிக்க தெரிகிறதோ இல்லையோ அடிதடி,சிலம்பம் ,கராத்தே,குதிப்பது,தாவுவது போன்ற எல்லா சர்க்கஸ் வேலைகளிலும் பிய்த்து உதறுவார்கள்.
யாராவது ஒரு மாணவர் தவறு செய்தாலும் எல்லா மாணவர்களையும் நிற்க வைத்து "பிரம்படி தண்டனை " கிடைக்கும்.அப்படிப்பட்ட முரட்டுத்தனமான பள்ளி அது!

நோய் வந்தால் கூட யாரும் வாய் திறக்க மாட்டார்கள்.சாதாரண மாணவர்களை விட நோய் வந்த மாணவன் அதிகமாக பயிற்சி செய்ய வேண்டும்.அதற்கு ஜாக்கியின் ஆசிரியர் சொல்லும் காரணம் வயிற்றைக் கலக்கும்..

"எவ்வளவுக்கெவ்வளவு வியர்வை அதிகம் வெளி ஏறுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு வியாதி குணமாகும் " என்பார் .

(இலேசான தலைவலி,காய்ச்சல் வந்தால் நீங்கள் கூட முயன்று பாருங்கள் வியர்க்க விறுவிறுக்கும் ஓடுதல், விரைவாக நடத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுபாருங்கள் அது உண்மை தான் என்று தெரியும் நானும் கூட அது போல முயன்று பார்த்தேன்,அது உண்மைதான் -ஆதி. )



ஒவ்வொரு சனிக்கிழமையும் நடக்கும் பந்தயத்தில் அவர் தோற்றுப்போனாலும் எல்லா மாணவர்களுக்கும் அடி நிச்சயம்!

ஆசிரியரின் தண்டனைகள் கூட விசித்திரமானது .தூக்கம் வந்தால் கூட ஒருவர் தலையை இன்னொருவர் தலையோடு "பளீர் பளீர் " என்று மோதி பொறி கலங்க வைப்பார்.

ஆசிரியர் ஜாக்கியை வளர்ப்பு மகனாக தத்து எடுத்து
வளர்க்க ஆரம்பித்தார்,ஆனாலும் ஜக்கியால் வரிசையாக நிற்க வைத்து விழும் பிரம்படி தண்டனையிலுருந்து தப்பிக்கத்தான் முடியவே இல்லை.... கடைசிவரை !



அதிரடிப் பார்வை தொடரும்....





இந்த வலைத் தளத்தின் பக்கங்கள் முழுக்க முழுக்க http://www.google.com/transliterate/indic/Tamil இந்த முகவரியில் உள்ள இணையத்தளத்தின் மூலம் எளிமையான

ammaa (type) =அம்மா (in tamil-"ammaa")

முறையில் தட்டச்சு செயப்பட்டது.

No comments:

Blog Archive